எல்லாம் மாப்பிள்ளை தேடவா வந்திருக்கீங்க.. இது எங்க வீட்டு மாப்பிள்ளை கிடையாது.. வனிதா வேற லெவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகியுள்ள வனிதா விஜயகுமார் ஹவுஸ்மேட்ஸ்களை ஒரு வழியாக்கி வருகிறார்.
பிக்பாஸ் வீடு இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக பிக்பாஸ் ஹோட்டலாக மாறியிருக்கிறது. பிக்பாஸ் ஹோட்டலுக்கு விருந்தாளியாக வந்துள்ளார் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, வளைத்து வளைத்து பேட்டிக் கொடுத்து சக போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைய வாய்ப்பு அளித்துள்ளார் பிக்பாஸ்.

நல்ல புரிதல்
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள வனிதா, மொத்த எபிசோடையும் பார்த்துவிட்டு போட்டியாளர்கள் குறித்து நல்ல புரிதலுடன் வந்துள்ளார். இதனால் யார் யார் எப்படி என்று புரிந்துள்ள வனிதா, அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவருக்கும் அட்வைஸ் செய்து வருகிறார்.

காதலுக்காக..
குறிப்பாக பெண் ஹவுஸ்மேட்ஸ்களை லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார் வனிதா. பிக்பாஸ் வீட்டிற்குள் காதலுக்காக நேரத்தை வீணாக்கியவர்கள் சாக்ஷி, அபிராமி மற்றும் லாஸ்லியா.

எஞ்சியிருப்பது..
இதில் சாக்ஷி காதல் தோல்வி, கவினால் ஏமாற்றம் என வெளியேறிவிட்டார். எஞ்சியிருப்பது அபிராமியும் லாஸ்லியாவும் தான்.

முகென் மீது காதல்
அபிராமியும் வந்த வேகத்தில் கவினை காதலித்தார். அவர் ஏற்றுக்கொள்ளாததால் பின்னார் முகெனுடன் நெருக்கமானார். முதலில் நட்பாக இருந்த அபிராமி பின்னர் முகெனை காதலிக்க தொடங்கினார்.

காதலிப்பேன்
ஆனால் முகெனுக்கு அபிராமி மீது காதல் இல்லை. அபிராமி தனக்கு ஒரு நல்ல ஃபிரன்ட் என்றே கூறி வருகிறார் முகென். ஆனால் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறி வருகிறார் அபிராமி.

நட்பை தாண்டிய ஒன்று
அதேபோல் கவின் மீது காதல் கொண்டுள்ளார் லாஸ்லியா. ஆனால் அதனை வெளிப்படையாக கூற மறுக்கும் லாஸ்லியா, கவின் தன்னுடைய நண்பர்தான் என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு கவின் மீது இருப்பது நட்பை தாண்டிய ஒன்று என்றே தெரிகிறது.

எங்க வீட்டு மாப்பிள்ளை அல்ல
இவை அனைத்தையும் நன்கு கண்காணித்துவிட்டு வந்துள்ள வனிதா, இந்த நிகழ்ச்சி ஒன்றும் எங்க வீட்டு மாப்பிள்ளை அல்ல எல்லோரும் மாப்பிள்ளை தேட என விளாசிவிட்டார். அப்போது அபிராமி மற்றும் லாஸ்லியாவின் முகம் தொங்கிப்போனதை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











