பிக்பாஸ் வீட்டில் கலக்கப்போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: மூன்றவது போட்டியாளர் சாக்க்ஷி அகர்வால்| Bigg Boss 3 Contestants

சென்னை: பிக்பாஸ் சீசன்3 தொடங்கியுள்ளது. ஒவ்வொரு போட்டியாளரும் கலைநிகழ்ச்சிக்கு பின்னும் கமலின் அறிமுகத்திற்கு பின்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தமிழில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஹிட்டாகவே இரண்டாவது சீசன் நடத்தப்பட்டடது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

ஃபாத்திமாப பாபு

ஃபாத்திமாப பாபு

இந்நிலையில் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக செய்தி வாசிப்பாளரான ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். கடந்த சீசனில் மும்தாஜ் இருந்த இடத்தில் ஃபாத்திமாபாபு இம்முறை இருப்பார் கூறப்படுகிறது.

லொஸ்லியா

லொஸ்லியா

லொஸ்லியாவை தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அசத்தலாக ஒரு நடன நிகழ்ச்சியை வழங்கிய கையோடு சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால்

லொஸ்லியாவை தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அசத்தலாக ஒரு நடன நிகழ்ச்சியை வழங்கிய கையோடு சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

நடிகை மதுமிதா

நடிகை மதுமிதா

நான்காவது போட்டியாளராக நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ள மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

நடிகர் கவின்

நடிகர் கவின்

ஐந்தாவது போட்டியாளராக சின்னத்திரை நடிகர் கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள முதல் ஆண் போட்டியாளர் இவர் தான்.

அபிராமி

அபிராமி

பிக்பாஸ் வீட்டின் ஆறாவது போட்டியாளர் அபிராமி. விளம்பர மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தங்கப் போகிறார்.

நடிகர் சரவணன்

நடிகர் சரவணன்

பிக்பாஸ் வீட்டின் ஏழாவது போட்டியாளராக நடிகர் சரவணன் உள்ளே சென்றுள்ளார். அவருக்கு மண்ணின் மனம் கமழ கரகாட்டம் தப்பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் முந்தைய சீசனில் பங்கேற்ற கஞ்சா கருப்பும் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

நடிகை வனிதா

நடிகை வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது போட்டியாளராக நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தனது தந்தையான நடிகர் விஜயகுமாருடன் சண்டை என இவர் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது நினைவு கூறத்தக்கது.

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

பிக்பாஸ் வீட்டிற்குள் ஒன்பதாவது போட்டியாளராக இயக்குநர் சேரன் சென்றுள்ளார். அண்மையில் திருமணம் என்ற படத்தை இயக்கி நடித்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் சேரன்.

நடிகை ஷெரின்

நடிகை ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது போட்டியாளராக நடிகை ஷெரின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின், விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

மோகன் வைத்யா

மோகன் வைத்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பதினோறாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் பரதநாட்டிய கலைஞர் மோகன் வைத்யா. தனது வாய் பேச முடியாத மகனை மேடையில் கட்டிப்பிடித்து கதறி பார்வையாளர்களையும் கலங்க செய்துவிட்டார்.

மாடல் தர்ஷன்

மாடல் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். வெளிநாட்டில் ஐடி இன்ஜினியராக வேலை பார்த்த தர்ஷன் சினிமா ஆசையில் சென்னை வந்துள்ளார். பல விளம்பரப்படங்களில் நடித்துள்ளார்.

நடனர் இயக்குநர் சாண்டி

நடனர் இயக்குநர் சாண்டி

பிக்பாஸ் வீட்டிற்குள் பதிமூன்றாவது போட்டியாளராக நடன இயக்குனர் சாண்டி என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் முந்தைய சீசனில் பங்கேற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை காஜலின் முன்னாள் கணவர் ஆவார்.

பாடகர் முகென் ராவ்

பாடகர் முகென் ராவ்

பிக்பாஸ் வீட்டிற்குள் பதிநான்காவது போட்டியாளராக முகென் ராவ் என்ட்ரி ஆகியுள்ளார். மலேஷியாவைச் சேர்ந்த முகென் ராவ், பாடகர் ஆவார்.

தொகுப்பாளர் ரேஷ்மா

தொகுப்பாளர் ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டிற்குள் பதினைந்தாவது போட்டியாளராக ரேஷ்மா சென்றுள்ளார்ர. ஏர்ஹோஸ்டஸாக இருந்த இவர், நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X