கெக்கபிக்கவென சிரித்த லாஸ்லியா.. டென்ஷனான பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் வார்னிங்! நடக்கப்போவது என்ன?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா கெக்கபிக்கவென சிரித்ததால் பிக்பாஸ் டென்ஷனானது புரமோவில் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா கவினை காதலித்து வருகிறார். பெற்றோர் கதறிய பிறகும் கூட, கவினுடனான காதலை கைவிடாமல் தொடர்ந்து காதல் செய்து வருகிறார்.
தான் தோற்றாலும் பரவாயில்லை கவின்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என்று விரும்புகிறார் லாஸ்லியா. இந்நிலையில் இன்று திங்கள் கிழமை என்பதால் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது.

வித்தியாசமான நாமினேஷன்
இந்த வாரம் நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. வழக்கமாக இருவரை நாமினேட் செய்ய சொல்லும் பிக்பாஸ் அதற்கான காரணத்தை கேட்பார்.

யாரை காப்பாற்ற போகிறீர்கள்?
ஆனால் இம்முறை யாரை காப்பாற்ற போகிறீர்கள் என கேட்கும் பிக்பாஸ், காப்பாற்ற விரும்பும் நபருக்காக பச்சை மிளகாயை கடித்து சாப்பிட வேண்டும் என கட்டளையிடுகிறார். அதன்படி முதல் புரமோவில் ஷெரின் மற்றும் சாண்டிக்காக பச்சை மிளகாயை கடித்து சாப்பிட்டு காப்பாற்றினார் தர்ஷன்.

கவினை காப்பாற்ற விருப்பம்
இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் லாஸ்லியா நாமினேஷன் புராசஸில் பங்கேற்றுள்ளார். கன்ஃபெஷன் ரூமில் கவினை காப்பாற்ற வேண்டும் என பிக்பாஸிடம் சொல்ல, அவர் அப்படியானால் பச்சை மிளகாயை சாப்பிடுங்கள் என்கிறார்.

கடுப்பான பிக்பாஸ்
இதனைக் கேட்ட லாஸ்லியா கெக்கபிக்கவென சிரிக்கிறார். மேலும் பச்சை மிளகாயை கையில் எடுத்து வைத்துக்கொண்டு சிரித்து சிரித்து வேடிக்கை காட்டுகிறார். இதனால் கடுப்பான பிக்பாஸ், லாஸ்லியா சீரியஸாக இருங்க, இது நாமினேஷன் புராசஸ் என எச்சரிக்கிறார்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
இதனை தொடர்ந்து நான் முயற்சி செய்கிறேன் என மிளகாயை எடுத்து வாயில் வைக்கிறார் லாஸ்லியா. இதன் பின்னணியில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற பாடல் ஒலிக்கிறது. இவ்வாறாக முடிகிறது இரண்டாவது புரமோ.

பயந்து ஓடிவிட்டாரா?
லாஸ்லியா, பச்சை மிளகாயை சாப்பிட்டாரா அல்லது பயந்து ஓடி விட்டாரா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். மேலும் இந்த நாமினேஷன் புராசஸில் கவின் என்ன செய்கிறார் என்பதை பார்க்கவும் மக்கள் ஆர்வமாய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











