பாவம்யா வனிதா.. கட்டம் சரியில்ல போல.. எல்லார்கிட்டேயும் வாங்கிக்கட்டிக்குது!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமாருக்கு எதிராக ஒட்டு மொத்த பிக்பாஸ் வீடும் திரும்பியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டில் நாட்டாமை வேலை பார்த்து வருகிறார். தேவையில்லாமல் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்து வருகிறார்.
ஏற்கனவே கவின் கேங்குக்கு வனிதாவை கண்டாலே பிடிக்கவில்லை. இந்நிலையில் இன்று ஷெரினுக்கு அட்வைஸ் செய்வதாக நினைத்து ஏதோ பேசப்போய், அது எதிலேயோ போய் முடிந்துவிட்டது.

டைனிங் ஹால்
இதனால் வனிதாவின் எதிரிகள் எண்ணிக்கை பிக்பாஸ் வீட்டில் அதிகரித்து விட்டது. இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரமோவில் எல்லோரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசுகின்றனர்.

ஷெரினுக்கு ஆதரவு
அப்போது லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது யார் சரியாக செய்யவில்லை என்ற டாப்பிக்கில் பேசுகின்றனர் போல. வனிதா, ஷெரின் மீது குற்றம் சுமத்துகிறார். ஷெரினுக்கு ஆதரவாக தர்ஷன் பேசுகிறார்.

சாண்டி மீது பாய்ந்த வனிதா
அப்போது சாண்டியும் வனிதாவிடம் ஏதோ பேச அவரிடம் பாய்கிறார் வனிதா. இதைத்தொடர்ந்து எப்போதும் போல யாரையும் பேசவிடாமல் தானே பேசிக்கொண்டிருக்கின்றார் வனிதா.

வனிதாவுக்கு எதிராக
இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த சேரன், எவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டே இருப்பது? முட்டாள் போல இருக்கிறோம் பதிலே சொல்ல முடியவில்லை என்று கத்துகிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது மொத்த வீடும் வனிதாவுக்கு எதிராக திரும்பியிருப்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications











