செல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்... டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்!
ரித்விகா பிக்பாஸ் டைட்டில் வின்னர் என தகவல் வெளியாகியுள்ளது
Recommended Video

சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரென்று தெரியவந்துள்ளது.
மூன்று மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வரவுள்ளது. நாளை மிகப்பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடக்க உள்ளது.

இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருப்பதனால், நிகழ்ச்சியை எப்படியாவது சுவாரஸ்யப்படுத்த வேண்டுமென முனைப்புடன் இயங்கும் பிக்பாஸ், தற்போது அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்குள் விட்டுள்ளார். சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்றவர்களைப் போல எல்லோரும் சுற்றி சுற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாதான் வரப்போகிறார் என்று பல யூகங்கள் கணிக்கப்பட்டன. எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை வேண்டுமென்றே காப்பாத்தியதும் டைட்டில் வின்னராக்குவதற்குத்தான் என பேசப்பட்டது.
மூன்று தமிழ்ப்பெண்கள் ஒரு வட இந்தியப் பெண் என இரண்டு தரப்பாக இருப்பதனால், தமிழ் மக்கள் தமிழ் உணர்வோடு தமிழ்ப் பெண்களுக்கு வாக்களிக்க நினைப்பார்கள், அப்போது வாக்குகள் பிரியும். அதனால் கொஞ்சமாக வாக்குகள் பெற்றாலும் தனிப்பட்ட முறையில் அதிகமாக இருக்கும் என்பதால் ஐஸ்வர்யா ஜெயிப்பார் என்றெல்லாம் ஆர்வடம் கூறினர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில், இப்போது ரித்விகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஐஸ்வர்யா நான்காவது இடம் என்றும் சொல்லப்படுகிறது. கனிவான பேச்சு, அடாவடி செய்யாமல் அன்பாக இருப்பது என பல விஷயங்களில் ஆரம்பத்திலிருந்தே ரித்விகா பலரின் விருப்பமான போட்டியாளராக இருந்துவந்தார். அதனால் ரித்விகா டைட்டில் வின்னர் என்ற செய்தி உண்மையானால் தமிழ்மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











