twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதெல்லாம் நல்லால்ல.. உனக்கும் குழந்தை இருக்கு.. பொறுப்பா பேசு.. சிவகுமாரை வெளுத்துவாங்கிய வனிதா!

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 81 : Vanitha Daughters visit BB house

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, நடிகர் சிவாஜியின் பேரனும் நடிகருமான சிவகுமாரை வெளுத்து வாங்கியுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார், அந்த வீட்டில் நடந்த பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். தான் சொல்வதுதான் சரி, தான்தான் பிக்பாஸ் என்பது போல் சக ஹவுஸ்மேட்ஸ்களை மிரட்டி வந்தார்.

    வனிதா வாயில் விழ வேண்டாம் என்று பலரும் அமைதியாக இருந்தனர். ஆனால் பார்வையாளர்களும் நெட்டிசன்களும் அவரை விடவில்லை, திட்டித்தீர்த்து சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர்.

    வனிதா குறித்து டிவிட்

    இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சுஜா வருணியின் கணவருமான நடிகர் சிவகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது டிவிட்டி வருகிறார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா நடந்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

    உங்க அம்மாவ தெரியும்

    உங்க அம்மாவ தெரியும்

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா விஜயகுமார், சிவகுமாருக்கு டிவிட்டரில் பதில் தெரிவித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளா டிவிட்டில் டியர் சிவகுமார், உங்க அம்மாவ எனக்கு நல்லாவே தெரியும், உங்க அப்பாவும் என் குடும்பத்தை சேர்ந்தவர்தான்.

    பொறுப்பா பேசு

    பிக்பாஸ் தொடர்பா நீ என்னப்பத்தி போஸ்ட் பண்ணியிருக்க சில கமென்ட்ஸ் உன்னோட இறந்துபோன அம்மாவுக்கு பெருமையா இருக்காது. இப்போ உனக்கு குழந்தை வேற இருக்கு, அதனால் மற்ற அம்மாக்களை பற்றி பேசும் போது பொறுப்போட பேச முயற்சி பண்ணு. இவ்வாறு பதிவிட்டிருந்தார் வனிதா.

    பார்வைகள் மாறுபடலாம்

    வனிதாவின் இந்த டிவிட்டை பார்த்த சிவகுமார், அவரின் டிவிட்டுக்கு பதில் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நன்றி அக்கா, நான் ஒரு மணி நேர நிகழ்ச்சியை பார்த்துதான் அனலைஸ் பண்ணியிருக்கேன், 24 மணிநேரமும் பார்த்து அல்ல. உங்களுக்கு என் அம்மாவை தெரியும் என்பதும் நீங்கள் அவருக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்தீர்கள் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.
    நீங்கள் என்னை நினைவில் வைத்திருப்பது ஒரு பெரிய கவுரவம், என்னுடைய பார்வைகள் மாறுபடலாம், ஆனால் அது என்னுடைய பார்வை.

    ஸ்க்ரீன் ஷாட்

    ப்ளீஸ் உங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய அனைத்து டிவிட்டுகளையும் படியுங்கள். இல்லையெனில் நான் உங்களுக்கு ஸ்க்ரின் ஷாட் எடுத்து அனுப்புகிறேன். உங்களை பற்றிய எனது கடைசி டிவிட்டில் கூட ஒரு தாயாக உங்களுக்கு அன்பை தெரிவித்து ஆதரவாகதான் டிவிட்டியிருந்தேன். ஆனால் அந்த ஏஞ்சல் ராபர்ட் என்ன செய்கிறார் உங்கள் மூலம் பப்ளிசிட்டியை தேட என்பதற்காகதான் இன்னும் கலாய்ச்சிக்கொண்டிருக்கிறேன், எனக்காக அல்ல லாட்ஸ் ஆஃப் லவ் என பதிவிட்டுள்ளார் சிவகுமார்.

    English summary
    Biggboss Vanitha Vijayakumar fights with actor and Sujavarunee's husband Shivakumar. Shivakumar gives reply through on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X