இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்ல எதுக்கு நாமிநேஷன்! பிக்பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் உள்ள வனிதாவை காப்பாற்றவே அவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்பவர் வனிதாதான். பிக்பாஸ் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும் குளிர்காயலாம் என காத்திருக்கிறார் வனிதா.
மேலும் ஹவுஸ் மேட்ஸ்கள் அங்கு சொல்வதை இங்கும் இங்கு சொல்வதை அங்கும் கூறி சிண்டு முடித்து விடுவதிலும் வில்லாதி வில்லியாக உள்ளார் வனிதா.

எவிக்ஷன் லிஸ்டில் வனிதா
வனிதாவின் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் விளாசி வருகின்றனர். வனிதா எப்போது எவிக்ஷனுக்கு வருவார் அவரை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என காத்திருந்தனர் ரசிகர்கள். இந்த வாரம் ஒரு வழியாக எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வந்துவிட்டார் வனிதா.

கொலையாளியான வனிதா
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான புரமோவில் வனிதாவுக்கு என தனி டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ். அதன்படி வீட்டில் கொலையாளியாக சுற்றி வரப்போகிறார்.

வனிதாவை காப்பாற்ற
பிக்பாஸின் இந்த டாஸ்கிற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் பட்சத்தில் நாமினேஷனில் இருந்து வனிதாவை காப்பாற்றவே பிக்பாஸ் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதுக்கான ஸ்கெட்ச்தான்
பிக்பாஸ், அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து வனிதா விஜயகுமாரை காப்பாற்ற போறாரு.. அதுக்கான ஸ்கெட்ச்தான் இந்த டாஸ்க், அதனால வனிதா இந்த வாரம் காப்பாற்றப்பட்டுவிடுவார் என்கிறார் இந்த நெட்டிசன்.
பிஸியாகவே வைத்திருங்கள்
அவளை எப்போதும் பிஸியாகவே வைத்திருங்கள் பிக்பாஸ், நல்ல வேலை கொடுத்திருக்கிறீர்கள்.. இல்லாவிட்டால் அந்த சைக்கோ வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட ஆரம்பித்துவிடும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பிக்பாஸ் டிவிஸ்ட்
இந்த டாஸ்க்க வனிதா பர்ஃபெக்ட்டாக செஞ்சு முடிச்சதால நீங்க எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற படுறீங்கன்னு டிவிஸ்ட் வைக்க போறார் பிக்பாஸ்... அதான உங்க பிளான் என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
கூடோன்லயே இருந்திருக்கலாமே
இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்ல எதுக்கு நாமிநேஷன் வந்துட்டு.. என வனிதாவுக்கு டாஸ்க் கொடுத்திருப்பதை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
வாய்ப்பு இல்லை ராஜா
வனிதாவை இந்த வாரம் காப்பாத்த நினைக்கிறாரா பிக்பாஸ்
வாய்ப்பு இல்லை ராஜா... என்று கூறுகிறார் இவர்.
எதுக்கு தனியா டாஸ்க்?
வனிதா ஏற்கனவே பைத்தியம் தானே அதுக்கு எதுக்கு தனியா ஒரு டாஸ்க்? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
வனிதா சேவ் ஆயிடும்
இந்த டாஸ்க்குல வனிதா வின் பண்ணுவா அப்புறம் வனிதாக்கு பிக்பாஸ் அதிகாரம் கொடுப்பார் அதன் மூலமா அவ சேவ் ஆயிடுவா, இப்படிதானேடா சீசன் 2 ல ஐஸ்வர்யா தத்தா யாஷிகாவ சேவ் பண்ணுனீங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











