Azhagu serial:அழகம்மை மருமகள் சாப்பிட்டது எந்த பறவை முட்டை?

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் குடும்பமே மலை மேலிருக்கும் குல தெய்வத்தை கும்பிட வேன்ல போறாங்க. ஏற்கனவே சரியில்லாமல் இருந்த வாடகை வேனை டிரைவரும் வேனை எடுத்துக்கிட்டு வர்றான்.

மலை ஏறிப்போகும் போது, ஒரு சரி இல்லாமலும் போகுது. சரியாக்கி பின்னரும் கோயிலுக்கு அந்த வேனில் கிளம்பறாங்க.

மலை மேல் ஏறிக்கிட்டு இருக்கும்போது வேன் பிரேக் பிடிக்காமல் தலை குப்புற கவிழ்ந்து அந்த பெரிய மலையில் ஆளுக்கு ஒரு பக்கமாக விழுந்துடறாங்க.

சீன் போல

சீன் போல

காவ்யா கண் விழிச்சு பார்த்தபோது ரவுடிகளிடம் மாட்டிக்கறா. பிறகு மதன் அவளை கண்டு பிடிச்சு காப்பாத்திடறான். ரவி அப்புவை காப்பாத்தி தூக்கிகிட்டு மத்தவர்களைத் தேடறான். பசிக்குமேன்னு அவன் ஒரு சாமியாரை பிடிச்சு அவங்க வீட்டில் குழந்தைக்கு பால் வாங்கிக் குடுத்து தானும் குடிக்க மயக்கமாகிடறான். அது வன காளிக்கு நரபலி கொடுக்கும் கும்பலாம். குழந்தையை நரபலி கொடுக்க பேசிக்கறாங்க.

சுதா பூர்ணா

சுதா பூர்ணா

சுதா ஒரு பாறையை பிடித்து தொங்கிக் கொண்டே காப்பாத்து பூர்ணான்னு கெஞ்ச பூர்ணா பேசாம நிக்கறா.பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்த சுதாவை ஒரு பாட்டி காப்பாத்தி மருந்து கொடுக்கறாங்க. பிறகு பாட்டியும் சுதாவும் மத்தவங்களைத் தேடி காட்டுக்குள்ளே வர்றாங்க. அழகம்மை என் பிள்ளைகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்து.இல்லை என் உயிரை எடுத்துக்கோன்னு கடுமையான விரதம் இருக்கறாங்க.

மகேஷ் முடியாது

மகேஷ் முடியாது

பூர்ணா காலில் அடிபட்டு ரத்தம் வழிய பாறை மேல் உட்கார்ந்து இருக்க,மகேஷ் வந்து அவளின் தோள் மீது கை வைக்கிறான்.திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த பூர்ணா.. மகேஷ் நீயா.. சும்மா குல தெய்வம் அது இதுன்னு சொல்லி இப்போ பாரு என்ன நடக்குதுன்னுன்னு சொல்றா. அண்ணன்,அண்ணி யாரையாவது பார்த்தியான்னு மகேஷ் கேட்க, உன்னை மாதிரிதானே நானும்... எங்கே பார்க்கறதுன்னு சொல்றா. வா காட்டை விட்டு வெளியில போக ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்போம்னு சொல்றான். மகேஷ் நடக்க முடியாது என்னாலன்னு சொல்றா.

தூக்கிக்கறான் மகேஷ்

தூக்கிக்கறான் மகேஷ்

எனக்கு உண்டான காயம் அது காயமில்லைன்னு சொல்ற மாதிரி தூக்கிக்கறான் மகேஷ். ரொம்ப தூரம் நடந்து வர இறக்கி விடு மகேஷ்.. உனக்கு கை வலிக்கலையான்னு கேட்கறா பூர்ணா. மனசுல உன்னை சுமக்கறதால கை வலி பெரிசா தெரியலைன்னு சொல்றான் மகேஷ்.எங்க வந்து ரொமான்ஸ் நடக்குது பாருங்க. பசிக்குது மகேஷ்னு சொல்றா பூர்ணா.

எந்த பறவையோ

எந்த பறவையோ

எந்த பறவையோ நிறைய முட்டைகள் இட்டு மரத்தின் கூட்டுக்குள் வைத்திருக்க, அதை மரமேறி எடுக்கறான் மகேஷ்.அது மட்டுமா ரெண்டு கல்லை உரசி நெருப்பை உண்டாக்கி குச்சிகள்போட்டு எரிய வச்சு முட்டையை மண்ணில் வைத்து உருட்டி சுட்டு வேக வச்சு பொண்டாட்டிக்கு தர்றான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X