Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Automobiles
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சன் டிவி பிறந்த நாளுக்கும் பிரியாணி போடுறாங்க...
தேர்தல் கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்ட கட்சிகள் பிரியாணி போட்டு வரும் நிலையில்...
சித்திரை முதல்நாளினை தொலைக்காட்சிகள் பலவிதமாக கொண்டாடுகின்றனர். சன் தொலைக்காட்சி 21வது பிறந்த நாளாக ஏப்ரல் 14ம் தேதியை கொண்டாடுகின்றனர்.
இதனையொட்டி பல்வேறு சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது சன் டிவி.
ஜீ தமிழ், விஜய் டிவி, பாலிமர் டிவி ஜெயா டிவி உள்ளிட்ட சேனல்கள் தமிழ் புத்தாண்டாக சித்திரை முதல்நாளை கொண்டாடுகின்றன.
திமுகவினர் தை முதல்நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதால், சித்திரை முதல்நாளை விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடும் கலைஞர் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

பிரியாணி, நையாண்டி
சன் டிவியில் ஏப்ரல் 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக, கார்த்தி, ஹன்சிகா நடித்த பிரியாணி திரைப்படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 11 மணிக்கு நையாண்டி திரைப்படமும், 3 மணிக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

அஜீத்தின் ஆரம்பம்
ஜெயா டிவியில் அஜீத் நடித்த ஆரம்பம் திரைப்பம் தமிழ் புத்தாண்டு சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

என்றென்றும் புன்னகை
ஜீ தமிழ் சேனலில் ஏப்ரல் 13ம் தேதி ஜீவா, திரிஷா நடித்த என்றென்றும் புன்னகை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

பாலு மகேந்திராவின் கனவு பட்டறை
ஏப்ரல் 14ம் தேதி காலை 8.30 மணிக்கு பாலுமகேந்திராவின் கனவுப் பட்டறை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் கலை உலக வாரிசுகள், பாலா, அமீர், ராம், வெற்றி மாறன், நடிகை சரிதா, தியாகராஜன், தனுஷ், பிரியாமணி, சசிகுமார் ஆகியோர் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஜக்குபாய் திரைப்படம்
சரத்குமார், ஷ்ரேயா நடித்த ஜக்குபாய் திரைப்படம் மதியம் 1 மணிக்கும், சிவகார்த்திக்கேயன், விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மாலை 5 மணிக்கும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.

சூப்பர் ஸ்டார் கோச்சடையான்
கோச்சடையான் திரைப்படம் பற்றி விஜய் டிவியில் ஏப்ரல் 14ம் தேதி காலை 8.30 மணிக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

சிறப்பு பட்டிமன்றம்
பட்டிமன்றம் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியா? விஜய் டிவியில் காலை 9 மணிக்கு குடும்பத்தின் நலத்திற்கு காரணம் ஆணா? பெண்ணா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் ஒளிபரப்பாகிறது.

விஸ்வரூபம்
கமல், ஆன்ட்ரியா நடித்த விஸ்வரூபம் திரைப்படம் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதைத்தவிர இரண்டாம் உலகம், இவன் வேற மாதிரி போன்ற சிறப்புத் திரைப்படங்களையும் ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி.