கதிர் செய்த தியாகம் பாரதிக்கு தெரியுமா? திருப்பங்களுடன் பொம்மலாட்டம்

By Mayura Akilan

சன் டிவியில் பொம்மலாட்டம் தொடர் 300 வது எபிசோடுகளை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் கதை சொதப்பலாக போனாலும் கதிர் - பாரதி ரொமான்ஸ் பொம்மலாட்டம் தொடரை சுவாரஸ்யமாக்கியது.

தற்போது ''பொம்மலாட்டம்'' தொடர் உணர்ச்சிபூர்வமாகவும், உணவுகளின் போராட்டத்துடனும் விறுவிறுப்புடன் 300 பகுதிகளை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சந்தோஷ் - பாரதி

சந்தோஷ் - பாரதி

சந்தோஷ், பாரதி இருவரும் பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தேவியின் வாழ்க்கையில் புயல் வீசுகிறது.

500 கோடி சொத்து

500 கோடி சொத்து

மகள் தேவியின் வாழ்க்கைக்காக 500 கோடி சொத்துக்களை மருமகன் மதன் பேரில் எழுதி வைக்கிறார் சிதம்பரம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான் மதன். கதிர் என்கிற மதன் தனது நண்பன் ராமிடம், ‘பாரதியின் வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் நன்றாக இருக்கவேண்டும் என்றால் தன்னால் தேவியை ஏற்றுக்கொள்ள முடியாது' என்கிறான்.

சந்தோஷ் கோபம்

சந்தோஷ் கோபம்

தனது தங்கை தேவிக்கும், மதனுக்கும் நடந்த கல்யாணம் ஒரு அக்ரிமெண்ட் கல்யாணம் என்பதை சித்தப்பா நடராஜன் மூலமாக தெரிந்து அதிர்ச்சி அடைகிறான், சந்தோஷ். இரண்டு கோடிக்கு ஆசைப்பட்ட மதனுக்கு 500 கோடி சொத்து கிடைத்து விட்டது. அதனால் தேவியை துரத்தி விட்டான் என நடராஜன் தூண்டி விட, சந்தோஷ் ஆவேசம் அடைந்து மதனை அடித்து நொறுக்குகிறான்.

தேவியின் தனிமை

தேவியின் தனிமை

மனம் திருந்தி வாழும் தன்னை மதன் ஏற்றுக்கொள்வான் என எதிர்பார்த்து ஏமாறும் தேவி, தனது வீட்டிற்கு திரும்பி ஒரு அறையில் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்கிறாள். மதன் நினைவில் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விடத் துணிகிறாள்.

கதிரின் தியாகம்

கதிரின் தியாகம்

சிதம்பரம், பத்ரி இருவரும் பாரதி நினைத்தால் மட்டுமே மதன் மனதை மாற்றி தேவியை ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என முடிவு செய்கின்றனர். இருவரும் மதன் மீது தீராத வெறுப்புடன் இருக்கும் பாரதியிடம் பாரதி மீது கதிர் வைத்திருந்த உண்மையான காதல் பற்றியும், பாரதியின் அம்மா ஆபரேஷனுக்காக கதிர் பணம் கேட்டதில் ஆரம்பித்து, சந்தோஷை திருமணம் செய்ய பாரதியை சம்மதிக்க வைத்து, இருவரையும் ஒன்று சேர்த்து வாழவைக்க நாடகமாடியது வரையிலுமாக அனைத்து உண்மைகளையும் சொல்கின்றனர்.

தேவியை ஏற்கொள்வானா?

தேவியை ஏற்கொள்வானா?

கதிரின் தியாகத்தை நினைத்து பாரதி அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறாள். அவனை உடனடியாக நேரில் சந்தித்து பேசவேண்டும் என பாரதி முடிவு எடுக்கிறாள். பாரதி, மதனை சந்தித்து அவன் தியாகத்தை பாராட்டி தேவியை ஏற்றுக் கொள்ள வைத்தாளா?

300 வது எபிசோட்

300 வது எபிசோட்

உணவு, தண்ணீர் இல்லாமல் அறையில் அடைந்து கிடக்கும் தேவி என்னவானாள்?.மதன் மனம் மாறி தேவியை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்தானா?. கதிர், பாரதி இருவரும் முன்னாள் காதலர்கள் என்ற உண்மை சந்தோஷிற்கு தெரிய வந்ததா? அவன் எடுத்த முடிவு என்ன? இந்த கேள்விக்கான பதிலுடன் பொம்மலாட்டத்தின் அடுத்தடுத்த பகுதிகள் தொடரவிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X