மயங்கி விழுந்த பிரபல டிவி நடிகை மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி
லண்டன்: தொலைக்காட்சி நடிகை மியா லெசியா நெய்லர் 16 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
மிலி இன்பிட்வீன் மற்றும் அல்மோஸ்ட் நெவர் ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த மியா லெசியா நெய்லர். 16 வயதே ஆன மியா திடீர் என்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி மியா திடீர் என்று மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் திடீர் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மியா இறந்த செய்தி அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மியா திறமையான நடிகை மட்டும் அல்ல நல்ல பாடகி, டான்ஸர் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நான் மேலும் புதிய நிகழ்ச்சிகளில் நடிக்கப் போகிறேன் என்று அண்மையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த மியா இப்படி திடீர் என்று இறந்துவிட்டாரே என்கிறார்கள் ரசிகர்கள்.
இறந்து போகும் வயதா மியா, ஏன் இந்த அவசரம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். மியா இறந்துவிட்டார் என்பதை பிரபலங்களால் இன்னும் நம்ப முடியவில்லை.
மியாவின் ஆத்மா சாந்தியடையட்டும், அவரின் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் அவரின் குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











