Roja Serial: சாவி கொத்து மாட்ற இடம் இடுப்பா மட்டுமில்லை... நல்லா எடுப்பாவும் இருக்கணும்!

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் கதை, திரைக்கதை, வசனம், காட்சி அமைப்பு என்று எலலாமே மிக நன்றாக இருக்கிறது. அன்னபூரணி அம்மாவின் பேரன் அர்ஜுன் செய்யும் சட்டப் பூர்வமான சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கிறது.

அர்ஜுனின் மனைவி ரோஜாவும், புருஷனுக்கேற்ற மாதிரி வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று, புருஷனுக்கு ஜால்றா போடுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. மொத்தத்தில் ரோஜா சீரியலில் வரும் அத்தனை காட்சிகளையும் மிக யதார்த்தமாக படம் பிடித்து இருக்கார் இயக்குநர்.

இன்னமும் சில வீடுகளில் இரும்புப் பெட்டியில் மாதத்துக்குத் தேவையான பணத்தை இருப்பு வைத்துக்கொண்டு, அதை பூட்டி கொத்து சாவியை இடுப்பில் செருகிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்த சாவிக் கொத்து இப்போது அர்ஜுனின் மனைவி, கல்பனாவின் மருமகள் ரோஜாவிடம் இருக்கிறது.

அனுமீது நம்பிக்கை

அனுமீது நம்பிக்கை

அண்ணா பூரணி அம்மா அனுதான் இறந்து போன தனது மகள் வயிற்று பேத்தி என்று அணுவை நம்புகிறார்கள்.அணுவும் ரோஜாவின் உண்மையான ஆதாரங்களை அவளுக்குத் தெரியாமல் திருடி கொண்டு வந்து, ஆஸ்ரமத்தில் இருந்து அன்னப்பூரணி வீட்டுக்கு வந்து அடைக்கலம் புகுந்துடறா. ஆனால், அந்த இடத்துக்கு உண்மையான சொந்தக்காரி ரோஜாதான். ஆனால், அவளுக்கு இது தெரியாது. இன்றுவரை ரோஜாவின் அப்பா அம்மா யாருன்னு தேடிக்கிட்டுத்தான் இருக்கான் அர்ஜுன்.

கொலைகாரி அணு

கொலைகாரி அணு

கொலைகாரி அணுவை, அர்ஜூன் தம்பி அஷ்வினுக்கு கல்யாணம் செய்துவைக்க முயற்சிக்கறாங்க.இதற்கு ஒத்துழைக்காத உண்மை தெரிந்த அர்ஜுனும், ரோஜாவும் கல்யாணத்தை நிறுத்திட பாடு படறாங்க. வேலைக்காரி சுமதி வந்து,ரோஜா இரண்டாயிரம் பணம் வேணும்.மளிகை சாமான் வாங்க. கொஞ்சம் எடுத்து குடும்மான்னு கேட்கறாங்க.

கொத்துச் சாவி ரோஜா

கொத்துச் சாவி ரோஜா

ரோஜா இரும்புப் பெட்டியை எடுத்துட்டு வந்து, இடுப்பில் இருந்து சாதிக் கொத்தை எடுத்து, பணத்தை எடுத்துக் கொடுக்கிறாள். இதை பார்த்த அணு, இந்த வீட்டுக்கு மருமகளா வரப் போறவதானே நான். இனிமேல் இந்த சாவிக் கொத்து என்னிடம்தான் இருக்கணும்னு பாட்டிகிட்ட சொல்ல, பாட்டியும், அந்த சாவிக் கொத்தை அணு கையில் கொடுன்னு சொல்றாங்க. ரோஜா தனது மாமியார் கல்பனாவைப் பார்க்க, கல்பனா ஒண்ணும் சொல்ல முடியாமல் தவிக்கறாங்க.

நீயே இருப்பில்

நீயே இருப்பில்

ரோஜா சாவிக் கொத்தை கையில் கொடுத்தால் மட்டும் போதாது. அப்படியே வந்து என் இடுப்பில் அழகா தொங்கவிடுன்னு சொல்றா அணு திமிராக. ரோஜா மெதுவாக வந்து அணு அருகில் நிற்க,அணு தனது இடுப்பை சற்றே வளைத்து ரோஜாவிடம் காமிக்கறா. இப்படி ஒரு நாள் முன்பு ஒரு நிலை ரோஜாவுக்கு வந்தபோது, அணுவைத் திட்டி, ,அவளையே தனது இடுப்பில் சாவிக்கொத்தை மாட்டச் சொன்னாள் ரோஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X