ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மீது தொழிலதிபர் புகார்!

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். மேலும், தன்னை ஏமாற்றி 20 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விசாரிப்பதற்கான ரிஹானாவை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. அந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் மாரி என்ற ரோலில் நடித்து வந்தார். அதிலிருந்து சொந்த காரணத்திற்காக விலகி அவர், தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், பல யூடியூப் சேனல்களில் நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார். திவ்யா, அர்னவ் பிரச்சனை நடந்தது போது, தானாக வந்து ஆஜராகி, திவ்யாவிற்கு ஆதரவாக பேசி பப்ளிசிட்டி தேடிக்கொண்டார்.

Reehana Begum Pandian Stores complaint
Photo Credit:

நடிகை ரிஹானா பேகம்: இந்நிலையில், நடிகை ரிஹானா மீது தொழிலதிபர் ஒருவர், திருமண மோசடி செய்து விட்டதாக கூறி பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொலப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜ்கண்ணன், வேளச்சேரியில் டிஸ்கோ பார் நடத்தி வந்துள்ளார். அவரின் நண்பரின் மூலமாக நடிகை ரிஹானா பேகம், ராஜ் கண்ணனுக்கு அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் இவர்களின் நட்பு வளர்ந்ததை அடுத்து, ரிஹானா பேகம், ராஜ் கண்ணனை வீட்டுக்கு அழைத்து சென்று, அம்மா மற்றும் தனது இரண்டு மகன்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மேலும், தான் முதல் கணவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும், அவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

முதல் கணவர் இருக்கும் போதே: இதையடுத்து, ரிஹானா பேகத்தின் அம்மா, தனது மகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் படியும், திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதை அடுத்து, ரிஹானாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந் தேதி இந்து முறைப்படி ராஜ் கண்ணன் ரிஹானாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த திருமணத்திற்கு முன்பாக தனியார் வங்கி ஒன்றில் 9 லட்சத்திற்கு அடமானம் வைத்து இருந்த நகையை மீட்டு கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கேட்டும் போது எல்லாம் 'G Pay' மூலமாக 9 லட்சத்திற்கும் பணம் கொடுத்துள்ளார். திருமணம் நடந்த நிலையில், ராஜ் கண்ணன், பூந்தமல்லியில் இருக்கும் வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார்.

ஆனால், ரிஹானா தான் ஒரு நடிகை என்றும், மற்றவர்களிடம் நான் சகஜமாக பழக வேண்டி இருக்கும், அதை எல்லாம் கட்டுக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். அவர் பேசி ஆடியோ ஆதாரத்தையும் ராஜ் கண்ணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், ரிஹானாவிற்கு முதல் கணவருடன் விவாகரத்து ஆகவில்லை என்பது திருமணம் செய்த பிறகு தான் தெரிய வந்தது என்றும், அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்றும் ராஜ்கண்ணன் புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பூந்தமல்லி காவல்துறையினர் ரிஹானா மற்றும் தாய் உட்பட 3 பேரையும் இன்று மாலை 3 மணிக்கு விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X