அக்கா இருக்கையில் தங்கச்சிக்கு மாப்பிள்ளையா... ஹூம் "போதும் பொண்ணு" அவஸ்தை!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் பேரழகி சீரியலில் போதும் பொண்ணு இப்போ கயல்னு பேரு வச்சுக்கிட்டு, பெரிய நடிகையா புகழின் உச்சியில இருக்காங்க. கருப்பா இருக்கறதுனாலயே இவங்க பலரால் வெறுக்கப்பட்டு, இப்போ நடிகையாகி பலரின் கனவுக்கன்னியாவும் இருக்காங்க.
ஆனா, இவங்க வீட்டுல அப்பா தவிர அம்மா பார்வதி, தங்கை, தம்பின்னு எல்லாருமே இவங்க மேல பாசமா இருக்காங்க. அப்பா ஸ்கூல் வாத்தியார் அதே கண்டிப்புல எனக்கு ரெண்டு புள்ளைங்கதான்னு இருக்கார்.
அக்கா கயலின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கயலின் தங்கையும், அம்மாவும், வாத்தியாருக்குத் தெரியாமல் புறப்பட்டு போறாங்க கயலுக்கு பிடிச்ச பாயசம் செய்து எடுத்துக்கிட்டு. அங்கே எல்லாரும் அந்த பாயசத்தை பகிர்ந்து சாப்பிட, கயலின் தங்கை கவிதா ஸ்டூடியோவை சுத்தி வேடிக்கை பார்க்கறா.
Also Read | தலை உயர்ந்த பெண்கள்.. தினந்தோறும் அருமையான தகவல்கள்.. டிவியைக் கலக்கும் மகளிர்!

கவிதாவுக்கும் தூண்டி
அங்கு ஒரு அசிஸ்டென்ட் கவிதாவைப் பார்த்து, ஏங்க... உங்களுக்கு நடிக்கணும்னு ஆசை இருக்கான்னு கேட்கறான். அதெல்லாம் இல்லைங்க என்று கவிதா சொல்ல, நீங்க நடிச்சீங்கன்னா கயல் மேடத்தை தூக்கி சாப்பிட்டுருவீங்கன்னு ஆசை காமிக்கறான்.

மேக்- அப்
உடனே கவிதாவுக்கு தான் மேக்-அப் போட்டுக்கிட்டு நடிகையாகிவிட்டது போல நினைவு வருகிறது. மேடம் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கறீங்களான்னு உதவியாள் கேட்க... வேண்டாம்..வேண்டாம்.. ஆப்பிள் ஜூஸ் கொண்டு வாங்கன்னு சொல்ற மாதிரி நினைக்கறா.

மாப்பிள்ளை
இந்த சமயத்துலதான் அப்பா, கவிதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கறார்.வீட்டுக்கும் வந்து தரகர் சம்மதம் சொல்லிவிட, தாய் பார்வதி என்னங்க மூத்த பொண்ணு இருக்குறப்போ, ரெண்டாவது பொண்ணுக்கு வரன் பார்க்கறீங்களேன்னு கேட்க, எனக்கு ரெண்டு புள்ளைங்கதான். மூத்தவன்னு யாரும் இல்லைன்னு கோபமா சொல்றார் அப்பா.

நடிகையா?
இங்கதான் நடிகை கயலுக்கு சிக்கல் தரவங்க எப்படியெல்லாம் சிக்கல் தரலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போது, கயலின் தங்கையிடம் வேறு, நீங்க நடிகையானா கயல் மேடத்தை விட டாப்புல வருவீங்கன்னு சொல்லி மந்திரிச்சு விட்டுடறாங்க. கவிதா கல்யாணம் செய்துக்குவாளா, நடிக்கப் போவாளா?
கதையும் நீளணுமே... கவிதாவும் ஒரு வேளை நடிகையாகிருவாளா?


Click it and Unblock the Notifications











