சின்னத்திரை நயன்தாராவெல்லாம் ஓகே... வாணி போஜன் பெரிய திரையில் ஜொலிப்பாரா?

சென்னை: சின்னத்திரை அறிமுக நடிகை வாணி போஜன், காதலர் தினத்தன்று வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடிச்சு இருக்கார். படத்தில் இவர் இரண்டாவது நாயகிதான் என்றாலும், கிட்டத்தட்ட ரித்திகா சிங்குக்கு இணையான கதாபாத்திரம்தான் வாணி போஜனுக்கும் என்று சொல்லலாம்.

வாணி போஜன் தனது கெரியரை விமான பணிப்பெண்ணாகத் தொடங்கினார். குறிப்பிட்ட விமான சேவை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவர் விளம்பர மாடலாக விளம்பர படங்களில் நடித்து வந்தார், புடவை விளம்பரம்... நகை விளம்பரம் என்று இவர் பலருக்கும் அறிமுகமான ஃபிகராக இருந்த நிலையில்தான், சின்னத்திரைக்கு நடிக்க வந்தார்.

விகடன் டெலிவிஸ்டாஸின் தெய்வமகள் சீரியல் இவருக்கு நினைத்தும் பார்க்காத அளவுக்கு புகழைத் தேடித் தந்தது. இதே சமயத்தில் ஜீ தமிழ் டிவியில் லட்சுமி வந்தாச்சு என்று ஒரு சீரியலிலும் நடித்து வந்தாரா. என்றாலும் அந்த சீரியல் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் அந்த சீரியல் வெகு சீக்கிரம் முடிந்தும் போனது.

பளபளக்குற பகலா நீ

பளபளக்குற பகலா நீ

பளபளக்கும்... மினுமினுக்கும் சருமத்துக்கு சொந்தக்காரரான வாணி போஜனுக்கு, தெய்வமகள் சீரியலில் அவர் நடிக்கும்போது ஆண் ரசிகர்கள் பெருகினார். ஒல்லியான தேகம், எந்த உடை போட்டாலும் பொருந்தும் நேர்த்தியான உடலமைப்பு என்று ரசிகர்களைக் கவர்ந்தார்.விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்ததில் சரும பாதுகாப்பு, தலை முடிப் பாதுகாப்பு என்பது இவருக்கு கை வந்த கலையாக இருந்தது. எப்போதும் சருமத்தையும் ,தலை முடியையும் மினுமினுப்பாகவே வைத்து இருந்தார்.

ஊட்டி மலை ரோசா

ஊட்டி மலை ரோசா

ஊட்டி மலை பகுதியில் பிறந்த வாணி போஜன், படிப்பிலும் கெட்டிக்காரராகவே இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்து முடித்த இவருக்கு, தமிழ், ஆங்கிலம் இரண்டு சரளமாகவே பேச வருகிறது. தாங்கள் படுகா மொழி பேசும் இனம் என்றும் கூறியுள்ள வாணி போஜன், தனது படிப்பு, புரஃபேஷன் இரண்டுமே தனது இன பெண்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்று தான் நம்புவதாக கூறுகிறார்.

பெரியத்திரை சின்னத்திரை

பெரியத்திரை சின்னத்திரை

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும்போதும், தெய்வமகள் சீரியலுக்கு பின்பும், தான் பெரியாத்திரை வாய்ப்பை நோக்கி காத்திருந்ததாக கூறும் வாணி போஜன், தெய்வமகள் சீரியல் நடிக்கும்போது வந்த வாய்ப்பை சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தட்டிக் கழித்ததாகவும் கூறுகிறார். சன் டிவி சீரியல், அதுவும் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு சீரியலில் இவருக்கு பதில் இவர் என போட சொல்லி விலகிவிட ஸீரோ சதவிகிதம் கூட விருப்பம் இல்லை என்றும் சொல்கிறார்.

பெரியத்திரை எப்படி

பெரியத்திரை எப்படி

பெரியத்திரை கைக்கொடுத்து இருக்கிறதா.. எப்படி இருக்கு என்றால், சின்னத்திரை பெரியத்திரை என்று வித்தியாசம் இல்லை. ரெண்டுமே எனக்கு பிடிச்சதுதான். பெரியத்திரை கைக்கொடுக்குமா என்பதை காத்திருந்து, இன்னும் பல வாய்ப்புக்கள் கிடைத்து அதை நான் ஒழுங்காக செய்த பின்னர்தான் பார்க்க வேண்டும். ஆனால், சினிமாவுக்கு ஏற்ற மாதிரியும் என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். அழகை பராமரிப்பது எனபது மட்டும் போதாது.. சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான நடிப்பு என்பது எதுவும் நம் கையில் இல்லை. கிடைக்கும் பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி நம்மை தயார்ப்படுத்தி நடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சது.. தவிர எல்லாமே இயக்குநர் கையில்தான் இருக்கிறது. என்னை நான் கதாபாத்திரத்துக்கு ஏற்ப மோல்டு செய்து இருக்கிறேனா என்பதைக் கூட இயக்குநர் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று கூறுகிறார்.

பெண்கள் ரசிகர்கள்

பெண்கள் ரசிகர்கள்

இன்னும் நான் தெய்வமகள் சத்யாவாகத்தான் பல பெண்களுக்கும்
தெரிகிறேன். ரசிகர்கள் ஓ மை கடவுளே வந்த பிறகு என்னை பிடித்த நடிகையாகப் பார்த்து பேசுகிறார்கள். என்றாலும், குடும்ப பெண்கள் மத்தியில் சத்யாவாகத்தான் வாழ்ந்து வருகிறேன். இது மாறுவதற்கே எனக்கு அவர்களுக்கு அவகாசம் வேண்டும், சத்யாவை மிஞ்சும் நல்ல கதாபாத்திரம் சினிமாவில் அமைய வேண்டும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் என்று கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X