twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா ப்ளஸ், பாப்கார்ன், சித்திரம் பேசுதடி... கேப்டன் நியூஸில் புதிய சினிமா நிகழ்ச்சிகள்!

    By Shankar
    |

    விஜயகாந்தின் கேப்டன் சேனலின் இன்னொரு அங்கமான கேப்டன் நியூஸ் 24மணி நேர செய்தி தொலைக்காட்சியில் மூன்று புதிய சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

    சினிமா ப்ளஸ், சினிமா பாப்கார்ன் மற்றும் சித்திரம் பேசுதடி ஆகிய இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் மூன்று தொகுப்பாளினிகள் தொகுத்து வழங்குகிறார்கள்.

    புதுப் படங்களுக்கு சினிமா ப்ளஸ்

    புதுப் படங்களுக்கு சினிமா ப்ளஸ்

    புதிதாக வெளியாகும் புதிய படங்களை பற்றிய செய்திகள், காட்சிகள், ஷூட்டிங் ஸ்பாட், படபூஜைகள் என அனைத்தும் இந்த நிகழ்ச்சியில் காட்டப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சிவசங்கரி சுந்தர்.

    அனைத்து மொழி படங்களும்..

    அனைத்து மொழி படங்களும்..

    வழக்கமாக மற்ற சேனல்களைப்போல இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்று ஹாலிவுட் படங்களைப்பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகிறது.

    சினிமா பாப்கார்ன்

    சினிமா பாப்கார்ன்

    புதிதாக ரிலீஸாகும் படங்களை பத்தின ஒரு திரைக் கண்ணோட்டத்தை வாராவாரம் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்கள். எந்த படமாக இருந்தாலும் அதன் குறை நிறைகளை சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மொழிப்படங்களின் திரைக்கண்ணோட்டமும் அலசப்படுவதுதான் ஹைலைட். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் மைதிலி. இந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.

    சித்திரம் பேசுதடி

    சித்திரம் பேசுதடி

    சினிமா என்பது வாழ்க்கையிலிருந்து விலகி, கனவுகளை மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அல்ல.. சமுதாயத்தை சீர்திருத்தும் சக்திமிக்க ஆயுதம். ஊமைப்பட காலத்திலிருந்து இன்று வரை சினிமா நமக்கு சொல்லும் செய்திகள் ஏராளம். பல வருடங்களுக்கு முன்னால் வந்த படங்களில் நல்ல கதை அம்சம், அருமையான பாடல் காட்சிகள், மனதை மயக்கும் இனிய இசை, அர்த்தம் பொதிந்த வசனங்கள் என இவற்றையெல்லாம் காண, நம்மை அந்த காலத்துக்கே அழைத்துச்செல்லும் முயற்சியாக சித்திரம் பேசுதடி நிகழ்ச்சியைத் தருகிறார்கள்.

    ரம்யா சௌந்தர்ராஜன்

    ரம்யா சௌந்தர்ராஜன்

    வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 1935 முதல் 1965வரை வெளியான திரைப்படங்களில் நிகழ்ச்சிக்கு ஒரு படம் என அதைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் அந்த படத்தின் சுருக்கமான காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரம்யா சௌந்தர்ராஜன்.

    English summary
    Captain News Channel is now telecasting 3 new cinema programmes, Cinema Plus, Popcorn and Chithiramj Pesuthadi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X