பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க்.. யாரு வின்னுன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யார் என்பது தொடர்பான புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஃபைனலை நெருங்கிவிட்டது. தற்போது விட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் அனைத்து வேலையையும் அனைவரும் பகிர்ந்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெறுகிறது.

பாலித்தீன் பேப்பர்
இதற்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் கேப்டன் டாஸ்க்கில் கவின், சாண்டி, முகென் ஆகிய மூன்று பேரும் பங்கேற்கின்றனர். இதற்காக அவர்கள் கை மற்றும் கால்களை பயன்படுத்தாத வண்ணம் உடல் முழுவதும் பாலித்தீன் பேப்பர் சுற்றப்படுகிறது.

நிற்க வேண்டும்
கவின் உடம்பில் ஷெரினும், சாண்டி உடம்பில் தர்ஷனும் முகென் உடம்பில் லாஸ்லியாவும் பாலித்தீன் பேப்பரை சுற்றுகின்றனர். பின்னர் அறைக்குள் வரையப்பட்ட கோட்டில் இருந்து மூன்று பேரும் உருண்டு சென்று அங்கு வரையப்பட்டுள்ள பாக்ஸ்க்குள் எழுந்து நிற்க வேண்டும்.

தூக்கி சென்ற தர்ஷன்
முதலில் யார் பாக்ஸ்க்குள் உருண்டு சென்று எழுந்து நிற்கிறாரோ அவரே பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆவார். போட்டி தொடங்கும் கோட்டிற்கு முகெனை தூக்கிச்சென்று விட்டார் தர்ஷன்.

சாண்டிதான் கேப்டன்
அதனை தொடர்ந்து மூன்று பேரும் உருண்டபடியே செல்கின்றனர். அதில் முகெனை முந்தி சென்ற சாண்டி, சட்டென எழுந்து நிற்கிறார். ஆக பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன், சாண்டி என பிக்பாஸின் மூன்றாவது புரமோவில் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











