இறுக்கிப் பிடிக்கும் இலந்தை ஜாம்.. கேப்டன் டிவியில் 'கில்மா' நிகழ்ச்சி!

By Mayura Akilan

Captain TV
உணவு என்பது நம் உணர்வோடு தொடர்புடையது. சில உணவுகளை சாப்பிட்டால் அமைதியாக சாத்வீக குணத்தோடு செயல்படுவார்கள். சில உணவுகள் கோபத்தை ஏற்படுத்தும். சில உணவுகள் பாலுணர்வை தூண்டும். இதை அடிப்படையாக கொண்டு ஒரு சமையல் மந்திரம் என்ற புதுமையான சமையல் நிகழ்ச்சி கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

பொதுவாக சமையல் நிகழ்ச்சி என்றாலே மதியம் அல்லது மாலை நேரத்தில்தான் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த சமையல் மந்திரம் நிகழ்ச்சியோ இயற்கை உணவு மூலம் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கூறும் நிகழ்ச்சி என்பதால் நள்ளிரவு நேரத்தில் ஒளிபரப்புகின்றனர்.

சமையல் மந்திரம் நிகழ்ச்சி அந்தரங்கம், தீர்வு போன்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தரங்கம் நிகழ்ச்சியில் நேயர்களின் சந்தேகங்களை தொகுப்பாளர் நந்தினி கேட்க மருத்துவர் ஆஞ்சநேயன் பதிலளிக்கிறார்.

அதேபோல் பாலியல் பிரச்சினைக்கு தேவையான உணவு வகைகளை சுவையாகவும், சூப்பராகவும் செய்து அசத்துகிறார் மருத்துவர். அவர் செய்து காண்பிக்கும் உணவுகளை செய்து சாப்பிட்டால் தீர்வு ஏற்படும் என்றே தெரிகிறது ஏனெனில் சமையலில் அவர் சேர்க்கும் பொருட்கள் அப்படி இருக்கிறது.

'மொச்சைக்குழம்பில் இச்சையை அதிகரிக்கலாம்' இறுக்கிப் பிடிக்கும் இலந்தை ஜாம் இது போன்ற கில்மாவான பொருட்களை எல்லாம் செய்து நேயர்களின் உணர்வுகளை உற்சாகப்படுத்துகிறார் மருத்துவர். நைட்ல தூக்கம் வராதவங்க திங்கள் முதல் வெள்ளி வரை 11 மணிக்கு கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை கொஞ்சம் போட்டுப் பாருங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X