ஐயோ மறுபடியும் தப்பா ஓட்டுப் போட்டுட்டாங்களோ? தர்ஷன் வெளியேற்றத்தால் பதறிய சீனியர் நடிகை!

Recommended Video

Bigg Boss 3 Tamil : தர்ஷன் வெளியேற லாஸ் தான் காரணம்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களின் கருத்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தர்ஷன் வெளியேற்றப்பட்டது குறித்து நடிகைகள் கஸ்தூரி, வனிதா, காஜல், ரித்திவிகா மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் தங்களின் கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

காத்திருக்க முடியாது

தர்ஷன் இன்று ஒரு வீரனைப் போல வெளியே நடந்து வந்தார். அதற்கு மரியாதை செய்கிறேன். பிக்பாஸ் 3 டைட்டைலை யார் வென்றாலும் பரவாயில்லை, மிகப்பெரிய வெற்றியாளர்கள் தர்ஷன் மற்றும் முகேன் தான். அவர்கள் ஏராளமான ஆஃபர்களில் மூழ்கப் போகிறார்கள். அவர்களுடன் ஒரு சில விளம்பரங்களைச் செய்ய நான் காத்திருக்க முடியாது! என்று கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

அவன் வலையில் வீழ்ந்தான்

அவள் திட்டமிட்டாள்.. அவள் சதி செய்தாள்.. அவள் சாதித்தாள்
அதை செயல்படுத்தும் அளவுக்கு அவள் பலமாக இருந்தாள்.
அவன் அவள் வலையில் விழும் அளவுக்கு பலவீனமாக இருந்தான். அவன் தேவையில்லாத எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது வருத்தமாக இருக்கிறது என்று வனிதா தனது டிவிட்டில் தர்ஷன் எவிக்ஷன் குறித்து பதிவிட்டிருக்கிறார்.

பெரிய திரையில் பார்க்கிறேன்

குட் லக் தர்ஷன், பெரிய திரையில் உன்னை விரைவில் பார்க்கிறேன்.. நீ லட்சக்கணக்கான இதயங்களை வென்றிருக்கிறாய் என்று நடிகை ரித்விகா தனது டிவிட்டில் தெரிவித்திருக்கிறார்.

ஏமாற்றம் தான்

ஐயோ மறுபடியும் தப்பா ஓட்டுப் போட்டுட்டாங்களோ?தர்ஷன் வெளியேற்றம் சற்று ஏமாற்றம் தான்! என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.

நீ ஹீரோ மெட்ரீயல்

கவலைப்படாத கண்ணா.. நீ ஹீரோ மெட்டீரியல். நீ நம் துறையில் கலக்கப்போகிறாய்.. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X