பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி யார்? அவார்டு கொடுத்து அசிங்கப்படுத்திய நடுவர்கள்.. தூக்கியடித்த லாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 75 : Losliya angry over sakshi

சென்னை: பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி என கொடுக்கப்பட்ட அவார்டை லாஸ்லியா தூக்கி எறிந்துவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோரை மீண்டும் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் எதிர்பார்த்தப்படியே அவர்கள் வந்த வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

வந்த கையோடு முடிந்த எபிசோடுகளை பார்த்துவிட்டு வந்து தங்களின் சுயரூபத்தை காட்டி வருகின்றனர். யார் யார் யாருக்கு பின்னால் என்ன பேசினர் என்பதையும் போட்டுகொடுத்து வருகின்றனர்.

முதல் புரமோ

முதல் புரமோ

இதனால் பிக்பாஸ் வீடு நாள்தோறும் சண்டையும் சச்சரவுமாக உள்ளது. இந்நிலையின் இன்று நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது.

ஹவுஸ்மேட்ஸ்க்கு அவார்டு

ஹவுஸ்மேட்ஸ்க்கு அவார்டு

அதில், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவார்டு கொடுக்கும் டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோ நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து அவார்டு வழங்குகின்றனர்.

பச்சோந்தி லாஸ்லியா

பச்சோந்தி லாஸ்லியா

அதன்படி முதல் அவார்டை அறிவிக்கிறார் மோகன் வைத்யா. அப்போது முதல் அவார்டு பச்சோந்தி. பச்சோந்தி போல் போலியானவர் என்று இந்த அவார்டு லாஸ்லியாவுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

தூக்கி எறிந்த லாஸ்லியா

தூக்கி எறிந்த லாஸ்லியா

மோகன் வைத்யா அப்படி கூறியதுமே லாஸ்லியா, கவின், சாண்டி ஆகியோரின் முகம் சட்டென மாறிவிட்டது. அவார்டை வாங்க ஸ்டேஜ்க்கு வந்த லாஸ்லியா, அவார்டை கையில் வாங்கிவிட்டு பின்னர் இந்த அவார்டு எனக்கு வேண்டாம் நீங்களே வச்சுக்கோங்க என்று கூறி அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்.

எனக்கு வேண்டாம்

எனக்கு வேண்டாம்

இதனால் அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் ஷாக்காகின்றனர். உனக்கு வேண்டாம் என்றால் வெளியே தூக்கி போடு, இங்கே போடாதே என்று கூறுகின்றனர். எனக்கு வேண்டாம் நான் இங்குதான் போடுவேன் என்கிறார் லாஸ்லியா.

கோமாக செல்லும் சாக்ஷி

கோமாக செல்லும் சாக்ஷி

அவார்டை தூக்கி எறிந்துவிட்டு போனால் ஜட்ஜ்க்கு என்ன மரியாதை இருக்கிறது. நான் அவார்டு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு கோபமாக செல்கிறார் சாக்ஷி. இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ.

இன்னைக்கு இருக்கு

இன்னைக்கு இருக்கு

ஆக அவார்டு கொடுத்து நாரதர் வேலையை ஆரம்பித்துள்ளார் பிக்பாஸ். முதல் புரமோவே படு பயங்கரமாக உள்ளதால் இன்றைய எபிசோடில் என்டெர்டைன்மென்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X