அவர் எனக்கு அப்பா... நீ அப்பாவைப் பார்க்க கூடாது... நோ அப்பா... ஒன்லி அம்மா!
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியல் சொல்ல முடியாத அளவுக்கு போரா போயிகிட்டு இருக்கு.
இதில் சந்திரவாக நடிக்கும் விஜி சந்திரசேகருக்கு விகடன் டெலிவிஸ்டாஸ் தன்னோட அழகி சீரியலில் கூட ரொம்ப பெரிய முக்கியத்துவம் குடுத்து இருப்பாங்க.
அந்த இமேஜை டோட்டலா டேமேஜ் பண்ணி இருக்காங்க ரடான் நிறுவனம்..

டைவர்ஸ் ஆனாலும்
கணவன் மனைவிக்குள் டைவர்ஸ் ஆனாலும் கூட பிள்ளைகள் யாரிடம் இருந்தாலும் மற்ற ஒருவர் பார்க்க அனுமதி உண்டு. இத்தனை நாட்கள் அல்லது இத்தனை மணி நேரம் என்று கூட வைத்துக்கொள்ள அனுமதி இருக்கு.

ஒன்லி அம்மா
சந்திரகுமாரி சீரியலில் சந்திராவின் மகள் அஞ்சலி தன் அப்பாவைப் பார்க்கவே போக கூடாதுன்னு கண்டிஷன் போடறாங்க. அப்பாவும், அவருடன் இருக்கும் ருத்ராவும் அஞ்சலியை தன்னிடமிருந்து பிரிச்சுருவாங்களாம். அம்மா நான் ருத்ராவை விட்டு வந்தாதான் உங்களை ஏத்துக்குவேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன்மா...நீங்கதான்ம்மா எனக்கு முக்கியம்னு அஞ்சலி சொல்லியும் சந்திரா நம்பலை.

அப்பா ஆசிர்வாதம்
நிச்சயதார்த்தத்துக்கு அப்பா ஆசிர்வாதம் வேணும்னு அஞ்சலி ஆசைப்பட, அவளை கட்டிக்க இருக்கும் சத்யா அப்பாகிட்ட அழைச்சுட்டு போறேன்னு சொல்றான். சந்திரா, அஞ்சலி நிச்சயதார்த்தமோ கல்யாணமோ ஒன்லி அம்மா நான் மட்டும்தான்..நோ அப்பான்னு கண்டிஷனா சொல்லிடறாங்க.

அம்மாவிடம் சொல்லாம
அம்மாவுக்கு தெரியாம போலாம்னு ரெண்டு பேரும் கோயிலுக்கு போறதா பொய் சொல்லிட்டு போறாங்க. ஆனா, வந்து ஆசிர்வாதம் வாங்கினதை சந்திராவின் அப்பாவுடன் குடித்தனம் நடத்தும் ருத்ரா சந்திராவுக்கு வீடியோவா எடுத்து அனுப்பி வச்சுடறாங்க.
இப்போ வீட்டுல சந்திரா பூகம்பத்தை உருவாக்க...எல்லாரும் பயத்தில் இருக்காங்க.


Click it and Unblock the Notifications











