Vanakkam Thamizha Programme: சன் டிவியின் வணக்கம் தமிழாவில் மாறுதல்!
சென்னை:சன் டிவியின் தினம் தினம் நிகழ்ச்சி வணக்கம் தமிழா. இந்த நிகழ்ச்சியில் வரும் திங்கள் முதல் மாறுதலை கொண்டு வருவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்து வருகிறது சன் டிவி.
இதுவரை ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியிலிருந்து சற்றே மாறுபட்டு, சில புதிய நிகழ்ச்சிகளை ப்ரோமோவில் வெளியிட்டு வருகிறது. யோகா, மாடியில் இசை, வெட்ட வெளி உணவு டாடி என்று நிகழ்ச்சியை மாற்றி உள்ளது.
சக்தி சுப்ரமணியம் ஐயாவின் நாட்டு மருத்துவம், கை ரேகை பலன்கள் போன்ற நிகழ்ச்சிகள் இனி இருக்காது. ராசி பலன்களும் இருக்காது, இதன் நேரத்தையும் நீட்டித்து உள்ளது.

அதிரடி மாற்றங்கள்
கடந்த ஜூன் மாதம் முதலே சன் டிவி அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவதையம், தேவை இல்லாதவைகளை கழித்துக்கட்டவும் முடிவு செய்துள்ளது என்றாலும், டிவியை வழி நடத்த கலாநிதி மாறன் அவர்கள் இப்போது யாரையும் நம்புவதாக இல்லையாம். தானே முடிவெடுத்து ஆலோசனை கேட்டு, இந்த அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார் என்று சொல்கிறார்கள்.

மகளின் விருப்பம்
கடந்த வருடம் சில மாதங்கள் சன் டிவி நிர்வாகத்தை தனது மகளிடம் ஒப்படைத்து இருந்தார் கலாநிதி மாறன். அப்போதுதான் ஸ்ருதி ஹாசன் ஹலோ சகோன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தினார். நடிகர் பிரசன்னா சன் டிவி குழுமத்தில் மாடலிங் ஷோ நடத்தியது என்று சில நிகழ்ச்சிகள் அதிரடியாக ஒளிபரப்பப்பட்டன. இருந்தாலும், அவை ஹிட்டாகவில்லை.

நம்பிக்கை போனது
கலாநிதி மாறனுக்கு நம்பிக்கை போனதில், நிர்வாகத்தில் மறுபடியும் அவர் ஈடுபட துவங்கி, ஜூன் மாதம் முதல் அதிரடி மாற்றங்கள் தொடரும் என்று டிவி தரப்பில் பேசக்கூட ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான் மற்ற தொலைக் காட்சிகளின் நிகழ்ச்சிகளின் ரேட்டிங் படி, சன் டிவியின் நிகழ்ச்சிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வருகிறார்.

நிறைய படங்கள்
முதலில் சன் டிவி போட்டிகளை சமாளிக்க, தன்னிடம் உள்ள திரைப்படங்களை அதிகம் ஒளிபரப்பி, சமாளித்து வந்தது. இப்போதும் இந்த முறையும் இதையே கையாள முடிவு செய்து, வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் மாற்றம், ஞாயிற்று கிழமைகளில் காலையிலேயே படம், மாலையில் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் என்று ஞாயிறு டபுள்ஸ் என்று அறிவிப்பு என்று மற்ற சேனல்களின் ரேட்டிங் மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications











