Don't Miss!
- News
"திரௌபதி"க்கு பாமக ஆதரவு ஏன்? அவர் முன்பாகவே மேடையில் அன்புமணி ஓபன் டாக்
- Finance
நீங்களும் வேண்டாம்.. உங்க பிஸ்னஸ்-ம் வேண்டாம்.. தெறித்து ஓடிய சீன நிறுவனம்..!
- Automobiles
முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்.. இந்த காருல போறதே தெரியாது! கப்பல் மாதிரி இருக்கும்!
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கை பார்த்தீங்களா... தொடர்ந்து எந்த சீரியல் முன்னிலையில் இருக்குன்னு பாருங்க!
சென்னை : சீரியல்களில் சிறப்பான ரேட்டிங்கை பெற ஒவ்வொரு சேனல்களுக்குள்ளும் போட்டிகள் காணப்படுகின்றன. தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகின்றன.
இந்த வாரமும் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவி, விஜய் டிவிக்கு இடையில் போட்டி நிலவுகிறது.
இதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் 3 இடங்களை சன் டிவி பிடித்துள்ளது. 4வது மற்றும் 5வது இடங்களையே விஜய் டிவி தொடர்கள் பிடித்துள்ளன.

நிகழ்ச்சிகளுக்கு இணையான சீரியல்கள்
ஒவ்வொரு சேனலிலும் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை, சீரியல்கள் பெற்று வருகின்றன. சமயத்தில் அதிக மெனக்கெடல்களுடன் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காட்டிலும் சீரியல்கள் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று விடுகின்றன.

சீரியல்களின் வெற்றி
நம் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை காட்டிலும் அடுத்தவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள மனித மனம் விருப்பம் காட்டும். இந்த மனநிலையே சீரியல்களின் வெற்றியாக காணப்படுகிறது. ஒரு முக்கியமான கேரக்டர், அந்த கேரக்டரின் வலி, உறவுகள் உள்ளிட்டவற்றை கதைக்களங்களாக கொண்டு இந்த தொடடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

தினந்தோறும் சீரியல்கள்
அந்த வகையில் தொலைக்காட்சிகளில் வாரந்தோறும் ஒளிப்பரப்பாகி வந்த இத்தகைய சீரியல்கள், தினந்தோறும் ஒளிபரப்பப்பட்ட போதும்கூட ரசிகர்கள் தங்களது வேலைகளை விட்டுவிட்டு தொடர்களை பார்ப்பது அதிகரித்துள்ளது. ரசிகர்களை உள்ளத்தை கவர்ந்த இந்த சீரியல்களின் வெற்றியை கணக்கில்கொண்டு டிஆர்பி ரேட்டிங்குகள் வழங்கப்படுகின்றன.

கயல் தொடர் முன்னிலை
அந்த வகையில் வாரந்தோறும் முன்னிலையில் இருக்கும் சீரியல்களை கணக்கில் கொண்டு டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்படப்பட்டு வருகின்றன. இந்தவாரம் வெளியாகியுள்ள இந்த ரேட்டிங்கில் சன் டிவியின் கயல் தொடர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சமீப வாரங்களில் இந்த தொடர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

4வது இடத்தில் விஜய் டிவி தொடர்கள்
அடுத்தடுத்த இடங்களையும் சன் டிவியின் வானத்தை போல மற்றும் சுந்தரி தொடர்கள் பிடித்துள்ளன. விஜய் டிவியில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த இரண்டு தொடர்களும் இணைந்து மகா சங்கமம் நடத்திய நிலையிலும் 4வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

பாரதி கண்ணம்மா தொடர்
இதையடுத்து 5வது இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் உள்ளது. இந்தத் தொடரில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களம் மற்றும் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகல் உள்ளிட்ட காரணங்களால் முதல் இடத்தை இந்த தொடர் தற்போது நழுவ விட்டுள்ளது. தற்போது மீண்டும் பரபரப்பான எபிசோட்களை இந்த தொடர் வழங்கி வருகிறது. வரும் வாரங்களில் மீண்டும் முன்னிலையை பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.