புதுயுகம் டிவியில் ரியாலிட்டி ஷோ நடுவராக சாயாசிங்…
புதுயுகம் சேனலின் அடுத்த புது வரவு நடிகை சாயாசிங். 'திறமை பொங்கும் தமிழகம்' ரியாலிட்டி ஷோவின் நடுவராக களம் இறங்கியுள்ளார்.
திருடா திருடி படத்தல் அறிமுகமானவர் சாயாசிங், தனுசுடன் இவர் ஆடிய ''மன்மதராசா...'' பாட்டு மூலம் தமிழகம் முழுவதும் பட்டைய கிளப்பியவர் சாயாசிங்.
ஆனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
சொந்த ஊர் பெங்களூர் என்பதால் கன்னடத்தில் சரோஜினி, பிரேம கதகளு என்ற சீரியல்களில் நடித்தார். தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பான நாகம்மா என்ற சீரியலில் நடித்தார். இப்போது சிறிய இடைவெளிக்குப் பின்னர் சின்னத்திரைக்கு வருகிறார்.

நான்குமொழிகளில் பிஸி
சினிமாவில் நடித்த போது தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி ஆகிய நான்கு மொழிகளில் நடித்த பிஸியான பெண் திருமண வாழ்க்கைக்குப் பின்னர் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளதால் சினிமாவில் அதிகம் நடிப்பதில்லை.

கதிர்வேலன் காதல்
மனதிற்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்று கூறும் சாயாசிங் கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதியின் அக்காவாக நடிக்கிறார்.

கதாநாயகி மட்டுமே முக்கியமில்லை
நடிப்புக்கு எல்லை, அளவுகோள் என்பதில்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை, கேம்ஷோ என அனைத்திலும் திறம்பட செய்தால் சிறப்பாக பிரதிபலிக்க முடியும்.

கிருஷ்ணாவின் காதல்
சாயாசிங்கின் காதல் கணவர் கிருஷ்ணா இப்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவருமே ஒரே பீல்டு என்பதால், இருவருமே கலந்து ஆலோசிப்பார்களாம்.

சீரியல் நாயகி
திறமை பொங்கும் தமிழகம் ரியாலிட்டி ஷோவில் சாயாசிங் உடன் பாடகர் விஜய் ஜேசுதாஸ், ப்ளாஷே ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். நல்ல டீமும், சிறந்த கதையும் அமைந்தால் சீரியலில் நாயகியாக நடிக்கத் தயார் என்கிறார் சாயாசிங்.


Click it and Unblock the Notifications











