Malar serial:என்னை விடு.. கதிரை விடு.. மலருக்கு ஆரூடம் பாரும்மா!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் போலீஸ் கமிஷனர் கதிரின் அக்கா பொண்ணு பூஜா. கதிரின் அக்கா அதாவது பூஜாவின் அம்மா, விதவையாகி அண்ணன் வீட்டோடு வந்து தங்கிவிட்டாள்.
இப்போ கதிரும், பூஜாவும் ஒன்றாக வளர்க்கிறார்கள். அதனால்தானோ என்னவோ கதிருக்கு பூஜா மீது அன்பு இருக்கிறதே தவிர திருமணம் செய்து கொள்ளும் ஆசையே இல்லை.
பூஜா கதிரை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறா. ஆனால், இப்போது கதிர் கட்டம் சரியில்லை. அவனின் ஜாதகப்படி அவனுக்கு இரண்டாம் தாரம்தான் நிலைக்கும்னு பூஜாவின் அம்மா சொல்றாங்க.

ஜாதகம் பார்ப்பதில்
கதிரின் அக்கா அதாவது பூஜாவின் அம்மா ஜாதக, ஜோதிடம், சோழி உருட்டறது... கட்டம் பார்க்கறது, குறி சொல்றது எல்லாமே தெரியும். அதீத நம்பிக்கையும் உண்டு. அதனால, தன்னோட பொண்ணு பூஜா தன் தம்பி கதிர் மேல ஆசைப்பட்டும் கூட ,கதிர் ஜாதகப்படி ரெண்டாம் தாரம்தான் நிலைக்கும் பூஜா. கல்யாணம் நடக்கும், ஆனா மலர் கதிர் கூட வாழ மாட்டா பாருன்னு சொல்லி பூஜாவைத் தேத்திடறாங்க.

தவற விட்டுட்டு
கையில் வெண்ணெய் இருக்கும் போது பூஜாவும், அவள் அம்மாவும் அதைத் தவற விட்டுட்டு இப்போ, மலருக்கும், கதிருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே தவிக்கறாங்க. பூஜாதான் ரொம்ப அப்செட் ஆகறா...இவ்ளோ நெருக்கமா கல்யாணத்துக்கு முன்னாடியே ஆகிட்டாங்கம்மா..கதிர் என் முன்னாடியே மலரை கட்டிப் பிடிக்கறான். அவ கூட காதலா பேசறான்..எனக்கு அப்படியே எரியுது. நீதான் ஆரூடம் அது இதுன்னு சொல்லி என் வாழக்கையை கெடுக்கறேன்னு பூஜா அழறா.

பூஜா மாமா
டெல்லி போயிருக்கும் பூஜாவின் மாமா, கதிரின் அப்பா தன் தங்கைக்கு போன் பண்றார். டெல்லியில என் ஃபிரண்டோட பையனுக்கு பொண்ணு வேணுமாம். நான் நம்ம பூஜாவை சொல்லி இருக்கேன்...என்ன தங்கச்சி...உனக்கு சம்மதமான்னு கேட்கறார். பூஜா அம்மாவும் நீங்க என்ன சொன்னாலும் சம்மதம்தான்னு சொல்லிடறாங்க. பூஜாவுக்கு கோவம் வந்து எழுந்து போயிடறா.

என்னம்மா சொன்னே
மாமாகிட்ட என்ன சொன்னேம்மான்னு பூஜா ஆத்திரப்பட...அண்ணன்கிட்ட நான் அப்படிப் பேசித்தான் வளர்ந்து இருக்கேன் பூஜான்னு சொல்லிட்டு, இரு நாளைக்கு காலையில பிரசன்னம் பார்த்துட்டு சொல்றேன்னு சொல்றாங்க. காலையில் குளிச்சு, சிவனை கும்பிட்டு, ஆரூடம் பார்க்க உட்கார்றாங்க. யாருக்கும்மா பார்த்தன்னு பூஜா கேட்கறா.கதிருக்கு பார்த்தேன்..அவன் இப்போது இருக்கற நிலையில் சந்தோஷமாத்தான் இருப்பானாம்னு சொல்றாங்க. சரி எனக்கு பாருன்னு பூஜா சொல்ல ,உனக்கு ரத்த காயம் ஆகுமாம். அதான் நீ பாரு ஆப்பிள் கட் பணறேன்னு கையை வெட்டிகிட்ட... கோபப்பட கூடாதாம்னு சொல்ல, இப்போ மலருக்கு பாருன்னு சொல்றா பூஜா

தியானம் தீ
பூஜாவின் அம்மா கண்களை மூடி ஆரூடம் பார்த்து கொண்டு இருக்க ,பூஜா எழுந்து ஒரு கற்பூரத்தை எடுத்து பற்ற வைத்து அம்மா முன்னால் துணியில் வைத்து விடுகிறாள். தீ பத்திகிட்டு எரிய கண் விழிச்சு பார்த்த அம்மா தீயை அணைக்கறாங்க. ஏம்மா உன் பிரசன்னத்துல எல்லாம் தெரிஞ்சுதே... இப்படி தீ பத்திகிட்டு எரியும்னு தெரியலையா... பிரசன்னம் பிரசன்னம்னு கதிர்கிட்டே இருந்து என்னை பிரிச்சுருவே இல்லை...நானே மலருக்கும் கதிருக்கும் நடக்க இருக்கும் கல்யாணத்தை நிறுத்துவேன்னு கோவமா சொல்லிட்டு போறா.
இதுதான் கையிலிருந்த வெண்ணெயை குடுத்துட்டு, இப்போ வெண்ணெய் வெண்ணெய் எங்கேன்னு அலையறது.


Click it and Unblock the Notifications











