குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகுகிறேன்..காரணம் இதுதான் விளக்கம் கொடுத்த பிரபலம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், இந்த சீசனில் நான் கலந்து கொள்ளவில்லை எனறு செஃப் வெங்கடேஷ் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று செய்திகள் பரவின. இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு வழக்கம் போல மக்களிடம் உள்ளது.

குக் வித் கோமாளி: விஜய் டிவி நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்களிடம் இருந்து வந்த ஆதரவால், நான்கு சீசன்களை கடந்துள்ளது. கடந்த சீசனில், நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியன் என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், இறுதி போட்டியில் மைம் கோபி, விசித்ரா, கிரண், சிவாங்கி, ஸ்ருஷ்டி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் தேர்வான நிலையில், மைம் கோபி டைட்டிலை தட்டிதூக்கினார். இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்ரா பெற்றனர்.

போட்டியாளர் யார்: தற்போது ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது, இதில் குக்கள் யார் கோமாளிகள் யார் என்பதை தெரிந்த கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இதில், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி, மாளவிகா மேனன். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பலருடைய மனம் கவர்ந்த விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இப்படி அனைவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரெடி ஆகிக்கொண்டு இருக்கும் போது, இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
விலகுகிறேன்: அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில், குக் வித் கோமாளி சீசன் 5 புதிய சீசன் தொடங்கும் என்றும், இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருப்பேன் என செய்திகள் பரவி வருகின்றன. மில்லியன் கணக்கான மக்களை மகிழ்ச்சியடையச் செய்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து நான் ஓய்வு எடுக்க போகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கி செயல்படுத்திய எனது இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.
கடினமான முடிவு: மேலும் இந்த நிகழ்ச்சி பலரது மன அழுத்தத்தை குறைக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுவது, ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் நான் அதில் உறுதியாக நிற்கிறேன். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். செஃபின் இந்த முடிவு குக் வித் கோமாளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











