Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வந்து பாருங்கடா.. மீமாவது கீமாவது.. மீமர்களுக்கு சவால் விட்ட செஃப் வெங்கடேஷ் பட் !
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது மூன்றாவது சீசன் நடந்துவருகிறது.
அதில், செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ், அஷ்வின், சிவாஞ்கி, பாலா உள்ளிட்ட பல பிரபலமடைந்துள்ளனர்.
ப்பா. வேறலெவல் மிரட்டல்.. சூர்யா 41 படத்தின் டைட்டில் இதுதானா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு!
குக் வித் கோமாளி 3
குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியானது. அதில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவிட்டதாக ஒருவர் கூறியதாக புகழ் தெரிவித்து இருந்தார். அதேபோல் நடுவர் வெங்கடேஷ் பட்டும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்தது என்று கூறியிருந்தார்.
என்னது குழந்தை பிறக்குமா ?
வெங்கடேஷ் பட் கூறியது, இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது கன்டென்ட் எப்போடா கிடைக்கும் என்று சுற்றித்திரியும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மூன்று நாளாக வெங்கடேஷ் பட்டை வெச்சு செய்தனர். என்ன குக் வித் கோமாளி பார்த்த குழந்தை பிறக்குமா ? என்றும், வடிவேலு கர்ப்பமாக இருப்பது போலவும், குக் வித் கோமாளி பார்த்தேன் கர்ப்பமடைந்தேன் என்பது போல மீம்ஸ்கள் இணையத்தில் பறக்கவிட்டனர்.
உருக்கமான பதிவு
இணையத்தில் பரவிய மீம்ஸால் கடுப்பான வெங்கடேஷ் பட் நேற்று தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இரண்டு நாள்கள் நிஜமாகவே உடைந்து போனேன். மன வேதனையாக இருந்தது. என்னை ட்ரோல் செய்வதற்காக கவலைப்படவில்லை. மனிதநேயம் செத்துவிட்டதாக என்பதை மீம்ஸ் கிரியேட்டர்கள் புரியவைத்துவிட்டார்கள். எது வேண்டுமானாலும் சாகலாம் ஆனால் மனிதாபிமானம் சாகக்கூடாது என்று உருக்கமான பதிவினை போட்டு இருந்தார்.
மீமாவது கீமாவது
வெங்கடேஷ் பட்டின் உருக்கமான பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து. செஃப் வெங்கடேஷ் பட் இன்று பதிவினை போட்டுள்ளார். அதில், OMGGGG... இது என்னை வியக்க வைக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமி 20 ஆயிரத்திற்கும் அதிகமான செய்திகள் மற்றும் கமெண்டுகள். நான் மீண்டும் வருவதற்கு இது போதுமே.. என் நலம் விரும்பிகள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி...நீங்கெல்லாம் இருக்குற வரைக்கும் மீமாவது கீமாவது... திரும்ப வந்துட்டானு சொல்லு என்று பதிவிட்டுள்ளார்.