குழந்தைகள் நிலைமை என்ன? இதற்கு பெயர் நட்பா? ரவி மோகனை விளாசிய பிரபலம்!

சென்னை: ஐசரி கணேஷின் மகள் ப்ரீதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவியும், பாடகி கெனிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததும், ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா பேசி உள்ளார்.

ஜெயம் ரவி, ஆர்த்தி ரவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் விவகாரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. மறுமணம் செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால், அது சட்டபூர்வமாக இருக்க வேண்டும். ஜெயம் ரவி விவகாரத்து அறிக்கை வெளியான பிறகு பாடகி கெனிஷாவுடன் கிசுகிசுகள் எழுந்தன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, அவருடன் நான் நட்புடன் இருக்கிறேன், அவர் ஒரு ஹீலிங் மையம் வைத்திருந்தார்கள் வருங்காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஹீலிங் மையம் அமைக்கப் போகிறேன் என்று சில கதைகளை சொல்லி இருந்தார். அது அனைத்துமே முழுக்க முழுக்க பொய்யான விஷயம் என்பது இப்போது அவரின் செய்கை மூலம் தெரிய வந்து இருக்கிறது.

ravi mohan kenisha aarti ravi

குழந்தைகளின் எதிர்காலம்: விவகாரத்து வழக்கே இன்னும் முடிவடையாத நிலையில் அதற்குள்ள ஜோடியாக திருமணத்தில் கலந்து கொள்வது எல்லாம் தவறான முன்னுதாரணம். இதற்காக நான் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை தவறாக சொல்லவில்லை. ஆனால் குழந்தைகள் இருக்கும் போது அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சில விஷயங்களை கணவன் மனைவியாக இருப்பவர்கள் விட்டுக் கொடுத்து தான் செல்ல வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இறுக்கம் குறைந்துவிட்டால், அதில் மூன்றாவது நபர் இடையில் வந்துவிடுவார். அது அம்மா, அப்பா என எந்த உறவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அதற்கு இடம் தந்துவிடக்கூடாது. அதே போல தான் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியினர் இடையே இப்போது கெனிஷா என்ற பெண் வந்து இருக்கிறார்.

ravi mohan kenisha aarti ravi

மனைவியின் கண்ணீர்: எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் மனைவியின் கண்ணீர் குழந்தைகளின் தவிக்க விட்டு விட்டு இப்படி செய்வது மிகப்பெரிய தவறு. ஒரு தந்தை கொடுக்கும் அன்பை யாராலும், கொடுக்க முடியாது. அம்மா அப்பா இருவரும் சேர்ந்து வளர்க்கும் குழந்தைகள்தான் இந்த சமுதாயத்தில் நல்ல குழந்தைகளாக இருக்க முடியும். அதே போல தாயை இழந்த குழந்தைகள் தவறான பாதைக்கு சென்று விடுவார்கள். அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன இதை மனதில் வைத்துக் கொண்டு விவகாரத்து செய்யும் தம்பதிகள் செயல்பட வேண்டுமென சேகுவேரா அந்த பேட்டியில் பேசினார்.

இந்நிலையில், ஆர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக. கடந்த ஒரு வருடமாக மௌனமாக இருந்தேன். இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் என நினைத்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும்இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பது தான் என உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X