செல்லம்மா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. சோகத்திலிருந்து மீட்கும் உறவு பொக்கிஷம் என உருக்கம்!

சென்னை: விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் வில்லியாக மேக்னாவாக நடித்த நடிகை ஸ்ரேயா சுரேந்திரனுக்கும் அவரது காதலர் ரோஹித்திற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

செல்லம்மா சீரியலில் லீட் கேரக்டரில் நடித்திருந்த அன்ஷிதா மற்றும் அர்ணவ் இருவரும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஸ்ரேயா. முன்னதாக சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல்தான் அவருக்கு அதிகமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

sriya surendran rohit chellamma serial

சீரியல் நடிகை ஸ்ரேயா சுரேந்திரன்: விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்று. இதில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த அன்ஷிதா மற்றும் அர்ணவ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், இருவரும் ஒருவரையொருவர் கண்டுக் கொள்ளாமல் இருந்தது மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு இவர்கள் விளக்கமும் கொடுத்திருந்தனர். நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்ததால் அதுபோல நடந்துக் கொண்டதாகவும் அன்ஷிதா தெரிவித்திருந்தார். செல்லம்மா சீரியல் ஏராளமான ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறுவதற்கு காரணமானவர் ஸ்ரேயா சுரேந்திரன்.

sriya surendran rohit chellamma serial

செல்லம்மா சீரியல்: முன்னதாக இவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் நெகட்டிவ் ஷேடில் இவர் நடித்திருந்த செல்லம்மா சீரியல் இவரை ஏராளமான ரசிகர்கள் திட்டுவதற்கு காரணமாக அமைந்தது. அந்த வகையில் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஸ்ரேயா, அன்ஷிதா மற்றும் அர்ணவுடன் இணைந்து அடுத்தடுத்த ரீல்ஸ்களையும் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். இந்நிலையில் ஸ்ரேயா சுரேந்திரனுக்கும் அவரது காதலர் ரோஹித்துடன் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்களை தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

sriya surendran rohit chellamma serial

காதலர் ரோஹித்துடன் நிச்சயதார்த்தம்: இதையடுத்து கேப்ஷனிலும் உருக்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சந்தித்துக் கொண்ட தாங்கள் இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைத்ததாக அவர் கூறியுள்ளார். இந்த ஒரு ஆண்டில் தங்களுக்குள் பல வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அந்த சண்டை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும் இதையடுத்தே பரஸ்பரம் தங்களுக்குள் இருந்த புரிதலை தாங்கள் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களின் இந்த சந்திப்பு தங்களது வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நம்மை சுற்றி வசதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருந்தாலும் நாம் சோகத்தில் இருக்கும்போது அதிலிருந்து மீட்டுக் கொண்டுவரும் உறவு நம்முடைய பொக்கிஷம் என்றும் உருக்கம் தெரிவித்துள்ளார்.

sriya surendran rohit chellamma serial

புகைப்படங்கள் பகிர்வு: அவரது நிச்சயதார்த்தம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடந்த நிலையில் தற்போதுதான் அவர் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சன் மியூசிக் தொலைக்காட்சியின் விஜேவாக தன்னுடைய கேரியரை துவங்கியவர் ஸ்ரேயா சுரேந்திரன். இதையடுத்து சூர்யா தொலைக்காட்சியில் சீரியலில் நடித்த ஸ்ரேயா தொடர்ந்து செல்லம்மா சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். இவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X