செல்லம்மாள் சீரியல் நடிகை காதலரை கரம் பிடித்தார்.. திரண்டு வந்து வாழ்த்திய நடிகள்!
சென்னை: விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் வில்லியாக மேக்னா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் காதலர் ரோஹித்தை கரம் பிடித்தார். அவரின் திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியான நிலையில் சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன் மியூசிக் தொலைக்காட்சியின் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா சுரேந்திரன். அதைத்தொடர்ந்து சூர்யா தொலைக்காட்சியில் சீரியலில் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் செல்லம்மா நடிகையாக அறிமுகமானார். அந்த சீரியலில் லீட் கேரக்டரில் நடித்திருந்த அன்ஷிதா மற்றும் அர்ணவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அதில், வில்லியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஸ்ரேயா. முன்னதாக சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல்தான் அவருக்கு அதிகமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. அந்த சீரியலில் முடிவடைந்ததை அடுத்து அன்ஷிதா மற்றும் அர்ணவ் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில், அர்ணவ் இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

செல்லம்மாள் சீரியல் நடிகை: அதே நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிலையில் கலந்து கொண்டு வந்தார். ஸ்ரேயா சுரேந்திரனுக்கும் அவரது காதலர் ரோஹித்துடன் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் உறவினர்கள் முன்னிலையில் நடித்து முடிந்த இந்த நிச்சயதார்த்த போட்டோவை பதிவு செய்து, உருக்கமான கேப்ஷன் போட்டு இருந்தார்.
காதலரை கரம் பிடித்தார்: இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் மற்றும் ரோஹித்தின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ஸ்ரேயாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களும் சக நடிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக செல்லம்மா சீரியலில் அவருடன் நடித்த பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கணவன் மனைவியாக இணைந்துள்ள ஸ்ரேயா சுரேந்திரன் மற்றும் ரோஹித் ஜோடிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











