தினமும் ஒரே டார்ச்சர்.. இதுக்காகத்தான் கல்யாணம் பண்ணேன்..நடிகை ஷபானா பேட்டி!
சென்னை: செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
பிரபல ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் செம்பருத்தி இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த செம்பருத்தி சீரியலில் நடிகை ப்ரியா ராமன், ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற கம்பீரமான வேடத்தில் நடித்து வருகிறார்.
செம்பருத்தி சீரியல்: 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சென்றது. இந்த சீரியலில் ஹீரோவாக கார்த்திக் ராஜ், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்திருந்தனர். வீட்டில் வேலையும் பெண்ணை முதலாளி காதலித்து திருமணம் செய்து கொண்டதை வைத்து இந்த சீரியல் பல நாட்கள் ஓடியது. அதில், ஷபானாவின் வெகுளித்தனமான சிரிப்புக்கும், க்யூட்டான அழகுக்கும் பலர் அடிமையாக இருந்தனர்.
நடிகை ஷபானா: இதையடுத்து, நடிகை ஷபானா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யன் என்பரை காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் பரவியது. இதையடுத்து, இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது, ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வருகிறார். இவரது கணவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
காதல் திருமணம்: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ஷபானா, தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் போது பொட்டு வைத்துக் கொண்டு நடித்தேன். நான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், இதற்கு என் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. மேலும், இந்த காரணத்திற்காக ஓராண்டுக்கு மேல் என்னிடம் பேசாமல் இருந்தனர்.
தினமும் டார்ச்சர்: அது மட்டுமில்லாமல், என் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து இந்து பையனை எந்த காரணத்திற்காகவும் திருமணம் செய்யக்கூடாது என்று தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை பேசி என்னை டார்ச்சர் செய்தார்கள். ஆனால், என் ஆழ் மனதில் ஒரு இந்து பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பதிந்து விட்டது. இதற்காகத்தான் நான் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த பேட்டியில் ஷபானா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











