கேமராவுக்காக நடிக்கிறார்.. எல்லாமே டிராமாதான்.. காலர் கேள்விக்கு லாஸ்லியா பதில்! கண்ணீர்விட்ட சேரன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் பாசமாக இருப்பது போன்று கேமராவுக்காக நடிக்கிறார் என்று லாஸ்லியா பதில் சொன்னது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று லாஸ்லியா, இயக்குநர் சேரனை தனது தந்தையை போல் இருப்பதாக கூறினார். மேலும் சேரனை சேரப்பா சேரப்பா என்றே அழைத்து வந்தார்.
தற்போது லாஸ்லியா கவினை காதலித்து வருகிறார். ஆகையால் கவின் என்ன சொல்கிறாரோ அதையே முழுமையாக நம்பி வருகிறார்.

கவின் சொன்ன வார்த்தை
சேரனுடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஃபுருட்டி காலர் ஒருவர் லாஸ்லியாவிடம், சேரன் உங்கள் மீது வைத்துள்ள பாசத்தை டிராமா என்று கூறினார், ஆனால் அதற்கு நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என்றார்.

சேரன் மீது குற்றச்சாட்டு
அப்போது அதற்கு பதிலளித்த லாஸ்லியா, கவினுக்குதான் பரிந்து பேசினார். மேலும் எது உண்மை எது பொய் என்று எனக்கு தெரியவில்லை. எல்லாம் கேமராக்காக நடப்பது போல் இருக்கிறது என சேரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

கேமராக்காகதான்
எதை நம்புவது யாரை நம்புவது என்ற குழப்பம் உள்ளது. சேரன், சிக்கன் வந்ததும் என்னை விட்டுவிட்டு சாப்பிட்டு விட்டார். கேமில் என்னை டார்கெட் செய்தார். சேரன் பாசமாக இருப்பது கேமராவுக்காகதான் என்று எனக்கு தோன்றுகிறது என்றும் கூறினார் லாஸ்லியா.

கண்ணீர்விட்ட சேரன்
லாஸ்லியாவின் பதிலை கேட்டு நிலைகுலைந்து போனார் சேரன். லாஸ்லியாவின் பதிலால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். லாஸ்லியா தன்னை கேமராவுக்காக நடிக்கிறார், சிக்கனை பார்த்ததும் மாறிவிட்டார் என்று கூறியதை கேட்டு கண்ணீர்விட்டார் சேரன்.

அந்த மனநிலையில் இல்லை
அதனை தொடர்ந்து கமல் அனைவரையும் கதை சொல்லுமாறு கேட்டபோதும், சேரன் கதை சொல்ல மறுத்துவிட்டார். தான் கதை சொல்லும் மனநிலையிலோ அல்லது பேசும் மனநிலையிலோ இல்லை என்றும் கூறினார் சேரன்.

அந்த அப்பா நான் இல்லை
மேலும் சிக்கனுக்காக மாறும் அப்பா நான் இல்லை என்றும் அவர் கூறினார். லாஸ்லியா தன்னிடம் பேசுவதில்லை, இதற்கான காரணத்தை சொல்ல அவர் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் கமலிடம் எமோஷனலாக பேசி கண்ணீர்விட்டார் சேரன்.

லாஸ்லியாவுக்கு அட்வைஸ்
இயக்குநரான சேரன், கதை சொல்லுமாறு கேட்டதை தனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து மறுத்துவிட்டார் என கமல் அவரை புகழ்ந்தார். உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள் என்றும் சேரனுக்கு அட்வைஸ் செய்தார் கமல். மேலும் சேரன் மீது இதுபோன்று குழந்தைத்தனமான குற்றச்சாட்டுக்களை கூற வேண்டாம் என்று லாஸ்லியாவுக்கும் கமல் அட்வைஸ் செய்தார்.


Click it and Unblock the Notifications











