தர்ஷன் எவிக்ஷன்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத சேரன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Recommended Video

லாஸ்லியாவுக்காக வெளியேற்றப்பட போகும் தர்ஷன்... ஷாக் தரும் பின்னணி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது குறித்து சேரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன், பல விளம்பரப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த தர்ஷன் மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றார்.

நேற்றைய எபிசோடில்

நேற்றைய எபிசோடில்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட தகவல் நேற்று முன்தினம் முதல் படுவேகமகா பரவி வந்தது. நேற்றைய எபிசோடில் அது ஒளிபரப்பப்பட்டது.

ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்

ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்

தர்ஷன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடுப்பான ரசிகர்கள் விஜய் டிவியையும் திட்டியும், தர்ஷனை புகழ்ந்தும் ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்தனர்.

சேரன் கருத்து

சேரன் கருத்து

அதன்படி #RedLightChannelVijayTV, #TharshanTheRealWinner என்ற ஹேஷ்டேக்குகள் நேற்று ட்ரென்ட்டாகின. இந்நிலையில் தர்ஷன் எவிக்ஷன் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை

அதாவது, ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர்.
அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்..அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என பதிவிட்டிருக்கிறார்.

நம்பிய சேரன்

நம்பிய சேரன்

பிக்பாஸ் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு தர்ஷனுக்குதான் உள்ளது என மக்களை போலவே நம்பியவர் சேரன். அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டார் தர்ஷன்.

சேரனுக்கும் அதிர்ச்சி

சேரனுக்கும் அதிர்ச்சி

இந்நிலையில் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது பார்வையாளர்களை போல சேரனுக்கும் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது என்பது அவரது டிவிட்டில் தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே தர்ஷனை தம்பி என்று மிக நெருக்கத்தில் பார்த்து பழகியவர் சேரன்.

பேச்சிலேயே தெரிந்தது

பேச்சிலேயே தெரிந்தது

தர்ஷனுக்கும் சேரன் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் இருந்தது. கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது அவர் பேசிய பேச்சிலேயே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X