தொடர்ந்து அவமதிக்கும் கவின்.. சேரனை வைத்தே புகழ் பத்திரம் வாசிக்க வைத்த பிக்பாஸ்.. புது டாஸ்க் போல!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 60 : காதலை வெளிப்படையாக சொன்ன Losliya

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை சேரனும், லாஸ்லியாவும் மாறி மாறி புகழும் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மற்றும் கஸ்தூரியை கண்டாலே கவினுக்கு பிடிக்கவில்லை. கிடைக்கும் கேப்பில் எல்லாம் சேரனை மட்டம் தட்டி பேசுவதையும் அவமானப்படுத்துவதுமாய் உள்ளார் கவின்.

நேற்றைய எபிசோடில் கூட சேரன் தனது ஆசிரியர்கள் குறித்து பகிர்ந்து கொண்டபோது கவின் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு சேரனை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசுவதை கவனிக்காமல் இருந்தார். கவினின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

கார்டன் ஏரியாவில்

கார்டன் ஏரியாவில்

இந்நிலையில் இன்று முழுக்க முழுக்க கவினை ஃபோகஸ் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது. அதில் கார்டன் ஏரியாவில் நடுவில் கவினை அமர வைத்து சுற்றி மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அமர்ந்திருக்கின்றன.

நீ மேலேதான் இருக்கிறாய்

நீ மேலேதான் இருக்கிறாய்

அப்போது சேரனும் லாஸ்லியாவும் கவினை மாறி மாறி புகழ்கின்றனர். அப்போது பேசும் சேரன், கவின் நான் உன்னை புரிந்துகொள்ள எனக்கு வேறு ஒரு கிராஃப் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது உள்ள கிராஃபில் நீ மேலேதான் இருக்கிறாய், கீழே இல்லை என்கிறார்.

நீ கெட்டவன் இல்லை

நீ கெட்டவன் இல்லை

மேலும் நீ நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நன்றாக இருக்கிறது என்று கூறும் சேரன், நண்பர்களை சம்பாதித்தால் போதும் வாழ்க்கையில ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம் என்று கூறுகிறார். தெரியாமல் சில தவறுகள் வருதே ஒழிய நீ கெட்டவன் இல்லை, நல்லவன் என்றும் கூறுகிறார் சேரன்.

இப்போ ரொம்ப பிடிக்கும்

இப்போ ரொம்ப பிடிக்கும்

இதேபோல் லாஸ்லியா பேசும் போது கவினை முன்பு பிடிக்கும், இப்போது ரொம்ப பிடிக்கிறது என்று கூறுகிறார். மற்றவர்களை தட்டிக்கொடுத்து வெற்றி பெற செய்யும் மனசு எத்தனை பேருக்கு இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் கவினுக்கு இருக்கிறது என்று கூறுகிறார்.

கோரிக்கை

கோரிக்கை

ஏற்கனவே கவின் பெண்கள் விவகாரத்தில் சிக்கி பேரை டேமெஜ் செய்து கொண்டார். அவரையும் சரவணனைப் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கவினுக்கு புகழ் பத்திரம்

கவினுக்கு புகழ் பத்திரம்

ஆனால் விஜய் டிவி கவின் தங்களின் சேனலை சேர்ந்தவர் என்பதால், அவர் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஹவுஸ்மேட்ஸ்கள் சேரனை வைத்தே கவினுக்கு புகழ் பத்திரம் வாசிக்க வைத்துள்ளது விஜய் டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X