உடைந்து போன கவின், சாண்டி.. ஆறுதல் கூறும் சேரன்.. சோகத்தில் பிக்பாஸ் வீடு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1: Day:44: சரவணன் வெளியேற்றத்தில் சேரனுக்கு சந்தோஷம்?- வீடியோ

சென்னை: சரவணன் வெளியேற்றப்பட்டதால் பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

பேருந்தில் பெண்களை உரசியதாக சொன்ன காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஹவுஸ்மேட்ஸ்களிடம் விஷயத்தை சொல்லி பிரியாவிடை பெற கூட சரவணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சரவணன் எங்கே போனார், என்ன ஆனார் என்ற குழப்பத்தில் இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ்கள். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் அனைவரையும் லிவிங் ஏரியாவுக்கு அழைத்த பிக்பாஸ், அவர்களிடம் சில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கிறார்.

கண்ணீர்

கண்ணீர்

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர் ஹவுஸ்மேட்ஸ்கள். மதுமிதா காரணம் கேட்க, என்ன காரணம் என தெரிவிக்கப்படவில்லை. சரவணன் வெளியேறியதை அறிந்து கவின், சாண்டி, மதுமிதா ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதனர். சேரன் மிகவும் வருத்தமடைந்தார்.

சேரன் ஆறுதல்

சேரன் ஆறுதல்

இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் கவினும் சாண்டியும் அழுதுக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு சேரன் ஆறுதல் கூறுகிறார்.

உங்களுக்கே தெரியும்

உங்களுக்கே தெரியும்

காரணம் சொல்ல முடியாத ஏதோ ஒரு விஷயத்துக்காக அவர் சென்றிருக்கிறார். அதனை எதிர்கொள்ளும் கெப்பாசிட்டி அவருக்கு இருக்கிறது, மனதை தேற்றிக்கொள்வோம் என்று கூறுகிறார் சேரன். அதற்கு பதில் கூறும் கவின், உங்களுக்கே தெரியும் சாண்டி அண்ணன் கூடவும், அவருடனும்தான் இருப்பேன் என்று கூறுகிறார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இதேபோல் அபிராமியும் சோகமாக காணப்படுகிறார். மொத்தத்தில் சரவணன் வெளியேற்றப்பட்டதால் பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியையும் பிக்பாஸையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அரைகுறை ஆடைகள்

#சித்தப்பு சரவணன் மக்கள் அவரை வெளியே அனுப்பமாட்டார் என தெரிந்து இவர்களே ஏதோனும் முடிந்ததை காரணம் காட்டி வெளியே அனுப்பி நல்லவர் போல காட்டிக்கொள்ளும் பிக்பாஸ். அரைகுறையான ஆடைகளை போட்டு பெண்கள் உடல்களை காட்டுவதை மட்டும் குழந்தைகள் பார்க்க மாட்டார்களா? என கேட்கின்றனர்.

அசிங்கப்படுத்திட்டிங்கய்யா

அசிங்கப்படுத்திட்டிங்கய்யா அந்த மனுஷன என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X