பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க்.. ஆராரிராரோ நான் இங்கே பாட.. கண்ணீர்விட்டு அழுத சேரன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது முகென் குடும்பத்தினர் வந்து சென்றதை பார்த்த சேரன் சீக்ரெட் ரூமில் இருந்து கண்ணீர்விட்டு அழுதார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் ஆரம்பித்தது. இதன் காரணமாக பிக்பாஸ் வீடு சில நாட்களுக்கு பிக்பாஸின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று நேற்றைய எபிசோடில் அறிவித்தார் பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் டாஸ்க்கில், ஃபிரீஸ், ரிலீஸ், ஸ்லோ மோஷன், லூப், ஃபார்வர்டு உள்ளிட்ட கன்ட்ரோல்கள் பிக்பாஸிடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியது.

ஃபிரீஸ் டாஸ்க்
இந்த டாஸ்க்கின் போது ஹவுஸ் மேட்ஸ்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வருவதும், அப்போது போட்டியாளர்களை ஃபிரீஸாக்கி பார்ப்பதும் பிக்பாஸின் வேலை. அதன்படி நேற்று முதல் முறையாக ஃபிரீஸ் டாஸ்க்கை தொடங்கிய பிக்பாஸ், சாண்டியிடம் சற்று நேரம் விளையாடி பார்த்தார்.

ஆராரிராரோ பாடல்
அதனை தொடர்ந்து ஃபிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். முதலில் முகெனின் அம்மா மெயின் டோர் வழியாக வந்தார். அவருக்காக ஆராரிராரோ பாடல் ஒளிபரப்பட்டது. இந்த பாடலை கேட்கும் போதே யாரோ ஒருவரின் அம்மா வரப்போகிறார் என்று தெரிந்துவிட்டது.

கண்ணீர்விட்ட சேரன்
வீட்டிற்குள் வந்த அம்மாவை கண்டவுடன் முகென் ஓடிப்போய் கட்டியணைத்து கண்ணீர்விட்டார். பின்னர் அவரை தூக்கி தனது அன்பை வெளிப்படுத்தினார். ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். இதனை சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்த சேரன், கண்ணீர்விட்டு அழுதார். அந்த காட்சிகளை பார்த்த பார்வையாளர்களும் கலங்கினர்.

ரசித்த பார்வையாளர்கள்
பின்னர் கன்ஃபெஷன் ரூம் வழியாக வந்த முகெனின் தங்கையை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த முகென், அவரையும் கட்டியணைத்தார். தொடர்ந்து அண்ணன் தங்கைக்கே உரிய பாணியில் அவர்கள் பேசிக்கொண்டதும் கொஞ்சிக்கொண்டதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











