அப்பா பேச்சைக்கேட்காமல் நான் செய்த தவறை நீயும் செய்யாதே.. லாஸ்லியாவுக்கு சேரன் மகள் அட்வைஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தந்தை சேரனை பார்க்க வந்த அவரது இளைய மகள் லாஸ்லியாவுக்கு காதல் விவகாரத்தில் அட்வைஸ் செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவர்களை சந்தித்து வருகின்றனர்.
முதல் நாளில் முகெனின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மகன் உட்பட மற்ற அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களையும் சந்தித்தார். அவர்களை தொடர்ந்து, சீக்ரெட் ரூமில் இருந்து உள்ளே வந்தார் சேரன்.

போட்டியாளர்களின் உறவினர்கள்
அவர் வந்த கையோடு லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். நேற்று தர்ஷன் குடும்பத்தினர், சேரன் குடும்பத்தினர் மற்றும் வனிதாவின் மகள்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர்.

லாஸ்லியாவுக்கு அட்வைஸ்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சேரனின் இளைய மகள் தாமினி, லாஸ்லியாவுக்கு அட்வைஸ் செய்தார். அப்பா நல்லதுக்காகதான் சொல்வார். அப்பா சொன்னதை கேட்காமல் நான் நிறைய அனுபவித்திருக்கிறேன் என்றார்.

சாரி கேட்ட லாஸ்லியா
அப்போது சேரன், அதெல்லாம் ஒன்றுமில்லை, அதைவிடு என தனது மகளை ஆசுவாசப்படுத்தினார். இதனைக்கேட்ட லாஸ்லியா, ஓகே, சாரி என்று கூறினார். சேரன் நடிக்கிறார் என்று லாஸ்லியா கூறிய நிலையில் அவரின் பெற்றோர் வந்து சென்ற பிறகு உண்மையை புரிந்து கொண்டார்.

கவினுடன் காதல் முறிவு
மேலும் கவினுடனான காதலை முறித்துக்கொண்ட லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் இருக்கப்போகும் எஞ்சிய கொஞ்ச நாட்களாவது, தனது பெற்றோர் விருப்பப்படி இருக்கப்போவதாக கூறினார். இயக்குநர் சேரனின் இளைய மகள் தாமினி, கடந்த 2013ஆம் ஆண்டு சினிமா டான்சர் சந்துருவை காதலித்தார்.

பிரச்சனையான காதல்
மகளின் காதலை சேரன் ஏற்க மறுத்ததால் சந்துருவின் வீட்டுக்கு தாமினி சென்றுவிட்டார். இந்த காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார் தாமினி. இதுதொடர்பாக நடைபெற்ற வழக்குகளின் போது முதலில் சந்துருவுடன் செல்வதில் உறுதியாக இருந்த தாமினி, பின்னர் பெற்றோருடன் செல்வதாக கூறி சேரனுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











