சேரன் ஏன் ரஜினியாக கமல்கிட்ட கேள்வி கேட்கல?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சேரன், ரஜினியாக கேள்வி கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். அப்போது கடந்த வாரம் கொடுக்கப்பட்ட கேரக்டர்களாக ஹவுஸ்மேட்ஸ் கமலிடம் கேள்விகளை கேட்டனர்.
சரவணன், விஜயகாந்தாக மாறி கேள்வி கேட்டார். மதுமிதா சரோஜா தேவியாகவும், முகென் விஜயாகவும் கேள்விகளை கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் நேர்மையாகவும் மகிழ்ச்சியாகவும் பதிலளித்தார்.

நல்ல நண்பர்கள்
இதனால் ரஜினி கேரக்டர் கொடுக்கப்பட்ட சேரன் எப்போது கேள்வி கேட்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ரஜினியும் கமலும் நல்ல நண்பர்கள் என்ற நிலையில் கமல் அரசியலுக்கு வந்துவிட்டார்.

ரஜினி அரசியல் பிரவேசம்
ரஜினி அரசியலுக்கு வருவேன், வரும் சட்டமன்ற தேர்தலில் தமது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்ற அறிவிப்போடு நிற்கிறார். அதற்கு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியதுபோல் தெரியவில்லை.

ரஜினியாக கேட்பார்
ஆனால் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து நாடாளுமன்ற தேர்தலிலும் களம் கண்டுவிட்டார். இதனால் இருவரின் அரசியல் பிரவேசமோ, சினிமா குறித்தோ, அல்லது நட்பு குறித்தோ ஏதாவது ஒரு கேள்வியை சேரன் நிச்சயம் ரஜினியாக கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால் சேரன் கேட்கவில்லை. சேரனே கேட்க ஒன்றும் இல்லை என கேட்கவில்லையா? அல்லது கேட்ட கேள்வி எடிட் செய்யப்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் சேரனின் கேள்வி இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கமலிடம் கேட்கவில்லை
ஏன் சேரன், ரஜினியாக கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கவில்லை என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
கேள்வி எங்க டா?
ரஜினி(சேரன்)யோட கேள்வி எங்க டா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
அரசியல் பஞ்சாயத்தா?
ஏன் ரஜினியாக சேரனின் கேள்வி நீக்கப்பட்டுள்ளது? ஏதாவது அரசியல் பஞ்சாயத்தா? என கேட்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











