பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சேரன்.. கட்டியணைத்த ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பில் கவின்.. என்னாகபோகுதோ?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 80 : Cheran Entry

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த சேரனை ஹவுஸ்மேட்ஸ்கள் கட்டியணைத்து வரவேற்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எவிக்ட்டானார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எல்லோருக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டு கமலை சந்தித்தார் சேரன்.

அப்போது சேரனை சீக்ரெட் ரூமுக்குள் அனுப்பப்போவதாக அறிவித்தார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து சீக்ரெட் ரூமுக்கு சென்ற சேரன், அங்கிருந்தபடியே அனைத்தையும் கவனித்தார்.

டவுட்டை கிளப்பிய வனிதா

டவுட்டை கிளப்பிய வனிதா

இந்நிலையில் நேற்று அவர் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கடிதம் மூலம் கேள்வி கேட்டார். கடிதத்திற்கு பதில் அளித்தனர் ஹவுஸ்மேட்ஸ்கள். ஏற்கனவே எப்படி ஒளிபரப்பபடுகிறது என்பதை பார்த்த வனிதா அதற்குள் இங்கு நடந்த விஷயங்கள் டிவியில் ஒளிபரப்பப்பட்டிருக்காது, சேரன் இங்குதான் சீக்ரெட் ரூமில் இருக்கிறார் என டவுட்டை கிளப்பினார்.

கத்தி ஆரவாரம்

கத்தி ஆரவாரம்

தொடர்ந்து அண்ணா அண்ணா என்றும் அழைத்தார். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் சீக்ரெட் ரூமில் இருந்து சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரை பார்த்ததும், சாண்டி, லாஸ்லியா, வனிதா, ஷெரின், முகென், தர்ஷன் ஆகியோர் அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்தனர்.

என் சக்கரை கட்டி

என் சக்கரை கட்டி

தர்ஷன் சேரனை தூக்கியே விட்டார். லாஸ்லியாவை அதே பாசத்துடன் சக்கரை கட்டி என கொஞ்சி மகிழ்ந்தார். இங்கேயே இருந்து எல்லாத்தையும் பார்த்து ஒட்டு கேட்டு வர்றீங்களா என்று செல்ல சண்டை போட்டார் வனிதா.

கடுப்பில் கவின்

கடுப்பில் கவின்

கவின் சேரனுக்கு கை மட்டும் கொடுத்தார். சேரனும் பெரிதாக ஒன்றும் அவரை கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே சேரன், தங்களின் காதல் விஷயத்தில் தலையிடுவதை கவின் விரும்பவில்லை. நேற்றைய எபிசோடில் சேரன் யார் நம் விஷயத்தில் என்று லாஸ்லியாவை மறைமுகமாக தூண்டிவிட்டார்.

என்ன நடக்கப்போகுதோ?

என்ன நடக்கப்போகுதோ?

இவற்றையும் சேரன் சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்தார். இந்நிலையில் இருவரும் இன்று நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதால் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X