டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Recommended Video

Bigg Boss 3 Tamil | Promo 2 | Day90 |Ticket to finale | கேள்வி கேட்ட கமல், திணறிய கவின்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் 15 போட்டியாளர்களில் ஒருவர் இயக்குநர் சேரன். பெரும்பாலும் பிரச்சனைகளை தவிர்க்கவே முனைப்பு காட்டி வந்தார் சேரன்.

எந்த பிரச்சனையையும் பேசி தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் வயது மற்றும் அனுபவத்தையும் தனது முதிர்ச்சியான அனுகுமுறையின் மூலம் வெளிப்படுத்தி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்துடன் காரணமாக இருந்தவர் சேரன்.

நேர்மையான போட்டியாளர்

நேர்மையான போட்டியாளர்

போட்டியாளர்களை தன்னுடைய பிள்ளைகளை போல பாவிக்கும் சேரன், அவர்களுக்கு தேவையான அறிவுரையை வழங்கி நல்ல தந்தையாகவும் சகோதரராகவும் இருந்து வந்தார். பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக உள்ள போட்டியாளர்களில் ஒருவர் சேரன்.

முழு ஈடுபாடு

முழு ஈடுபாடு

முழுக்க முழுக்க இளைஞர்கள் உள்ள ஒரு போட்டியில் அவர்களுக்கு இணையாக போட்டி போட்டவர் சேரன். எந்த டாஸ்க்காக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார்.

சீக்ரெட் ரூமில் சேரன்

சீக்ரெட் ரூமில் சேரன்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் ஆப்ஷனை கொடுத்து மூன்று நாட்கள் சீக்ரெட் ரூமில் தங்க வைத்தார்.

நோ நாமினேஷன்

நோ நாமினேஷன்

இதனை தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார் சேரன். கடந்த வாரம் சீக்ரெட் ரூமில் இருந்ததால் நாமினேஷனில் இடம் பெறாமல் இருந்தார் சேரன்.

சேரன் வெளியேற்றம்

சேரன் வெளியேற்றம்

ஆனால் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்த சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடும் நேற்றே படம் பிடிக்கப்பட்ட நிலையில் சேரன் வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

லாஸ்லியா குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதால் அவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில் சேரன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தவிக்கும் சேரன்

தவிக்கும் சேரன்

சேரன் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். முதுகுவலி மூச்சுப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் சேரன், டாஸ்க்கை செய்ய முடியாமலும் உட்கார முடியாமலும் எழுந்திரிக்க முடியாமலும் தவித்து வருகிறார்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

இந்நிலையில் உடல்நிலையை காரணமாக வைத்தே அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. சேரன் வெளியேறியதாக வெளியான தகவலை தொடர்ந்து மக்கள் விஜய் டிவியையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X