Bigg boss 3 tamil: பிக் பாஸ் வீட்டில் சேரன் உலகநாயகன் சொன்னது போல!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Vanitha : யாருக்கு என்ன ஆனாலும் தன் வேலையை சரியாக செய்யும் வனிதா- வீடியோ

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இப்போது துவங்கி உள்ளது. இந்த சீசனில் அனைவருக்கும் தெரிந்த முகம் என்று பார்த்தால் வனிதா ,மதுமிதா, சாண்டி, சரவணன், கவின், ஃபாத்திமா பாபு, சேரன், மோகன் வைத்யா, ஷெரீன்,சாக்ஷி அகர்வால் இவங்கதான்.

அபிராமி, மீரா இவர்களை தமிழ் மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. முகின் மலேசியாவிலிருந்து வந்தவர்.லோஸ்லியா, தர்க்ஷன் இருவரும் இலங்கையிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தமிழ் மக்களுக்கு புது அறிமுகம்.

இயக்குநர் சேரன் பிக்பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ் மேட்ஸ் போலத்தான் எல்லா பங்கும் ஆற்றுகிறார். நிறைய பேசுவதில்லை. அவர் வேலையை அவர் செய்கிறார் என்பது போலத்தான் வெளியில் தெரிகிறது.

லோஸ்லியா தர்ஷன்

லோஸ்லியா தர்ஷன்

லோஸ்லியா, தர்ஷன் கூட தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாலும் லோஸ்லியா இப்போது கொஞ்சம் பேசவும் ஆரம்பித்து இருக்கார்.கோபமும் காண்பிக்க ஆரம்பித்து இருந்தாலும் அது முழுதாக இன்னமும் வெளிப்படவில்லை. அபிராமி, ஷெரீன் வனிதா, மதுமிதா என்று ஆக்ரோஷமாக கதைத்து கொண்டு இருந்தபோது, படாரென நாற்காலியை விலக்கிவிட்டு எழுந்ததற்கும், அபிராமி, சாக்ஷி, ஷெரீன் பேசிக்கொண்டு இருந்தபோது, முகத்தை திருப்பிக்கொண்டு போனதற்கும் அவர் சொன்ன காரணம் பொருந்தவில்லை.

சேரன் எதற்கு

சேரன் எதற்கு

நாமினேஷன் பொது சேரன் எதற்காக தர்ஷன் லோஸ்லியா இருவரும் இவர்களுடன் இந்த வீட்டிலிருப்பது எனக்கு சரியாகப் படவில்லை என்று சேரன் நாமினேஷனுக்கு இப்படி ஒரு காரணத்தை எதற்காக சொன்னார்? இவர்களுடன் இருப்பது என்று யார் யாரை சொன்னார்.ஒரு திரைப்பட இயக்குநராக இருந்துகொண்டு இப்படி பேதம் பார்க்கும் கலைஞன் என்ன கலைஞன். தமிழகத்தில் இளைஞர்கள் லோஸ்லியாவுக்கு ஆர்மியே ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சேரனுக்கு டாஸ்க் இல்லையா?

சேரனுக்கு டாஸ்க் இல்லையா?

ஆண்கள் எல்லாரும் வீட்டிலிருக்கும் பெண்களின் உடையை அணிந்துகொண்டு,அவர்கள் போலவே நடித்து காண்பிக்க வேண்டும். மோகன் வைத்யா கூட மதுமிதா போல நடித்து காமித்தார்.சேரன் மட்டும்தான் எந்த வேஷமும் போடாமல் பேண்ட் சட்டையுடன் அப்படியே இருந்தவர். அவருக்கும் மட்டும் அந்த டாஸ்க் இல்லையா,இல்லை,அவருக்கு செய்ய பெண்கள் கேரக்டர் இல்லையா என்று புரியவில்லை. அப்படி இருந்தால் அதை சொல்லி இருக்க வேண்டாமா?

கமல்ஹாசன் சொன்னது போல

கமல்ஹாசன் சொன்னது போல

சேரனை நன்கு கவனித்தால் கமல்ஹாசன் சொன்னதுதான் நடக்கப் போகுதோ என்பது போல தோன்றுகிறது.சேரன் ஹவுஸ் மேட்ஸை விட்டு, சற்று விலகி நின்று அவர்களுக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அப்சர்வ் பண்ணுகிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசன் சொல்லித்தான் உள்ளேஅனுப்பினார். யார் கண்டது உள்ளே போயிட்டு வெளியில் வரும் சேரன்.ஒரு நல்ல திரைக்கதையோடு கூட திரும்பி வரலாம் என்று.

அப்படித்தான் நடக்கப் போகிறது போலும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X