அப்படி பேசாதீங்க அண்ணே.. அவமானப்படுத்தியபோதும் அன்பாக பேசிய சேரன்! இதுக்கே அவார்டு கொடுக்கலாம்!
Recommended Video
சென்னை: தன்னை சரவணன் தரக்குறைவாக பேசிய போதும் சேரன் மிக நிதானமாக பேசிய விதம் ரசிகர்களிடையே அவரது மதிப்பை அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணன் இன்று மிகக் கேவலமாக நடந்துக்கொண்டார். இத்தனை நாளாக பின்னாடி பேசிவிட்டு முன்னாடி நல்லவர் போல் நடித்து வந்தார் சரவணன்.
பல முறை சேரன் குறித்து பின்னாடி தவறாக பேசி வந்துள்ளார். அதோடு சேரனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதையே குறியாக வைத்துள்ள சரவணன் காரணமே இல்லாமல் சப்பையாக ஏதாவது ஒன்றை கூறி அவரை நாமினேட் செய்தார்.

சரவணன் அன்ட் கோ
சேரனுக்கு பின்னால் அவ்வளவு பேசியிருக்கிறார் சரவணன். கடந்த வாரம் கூட சேரனை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் சரவணன் அன்ட் கோ. சேரனுக்கு எதிராக சாண்டி, கவின், மீரா என கூட்டு சேர்ந்து வேலை பார்த்தார் சரவணன். ஆனால் சேரனுக்கு முன்னால் மட்டும் எப்போதும் ஒன்றுமே பேசாதவர் போலும் பெரிய மனிதர் போலும் காட்டிகொள்வார்.

போடா வாடா என பேசுவேன்
இந்நிலையில் இன்று சரவணனின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. சேரனை லூசு என்றார். போயா வாயா என்ற அவர், இனி போடா வாடா என பேசுவேன் என்று எச்சரித்தார்.

கேவலமாக நடந்துகொண்ட சரவணன்
மேலும் அடிப்பது போல் சேரனிடம் பாய்ந்த சரவணன் உனக்கு என்ன பிரச்சனை என ஒருமையில் கேட்டு மிரட்டினார். அடிக்கடி நீ, போ, வா என பேசி கேவலமாக நடந்துகொண்டார் சரவணன்.

அப்படி பேசாதீங்க அண்ணே
ஆனால் ஒரு முறை கூட சேரன் தவறாக பேசவில்லை. மரியாதைக் குறைவாகவும் பேசவில்லை. இத்தனை நாளாக நீங்கன்னு சொன்னீங்க இப்போ நீ போன்னு பேசுறீங்க என்று கேட்ட அவர், அப்படி பேசாதீங்க அண்ணே என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றார்.

அடிதடியே நடந்திருக்கும்
சேரன் இதுவரை சரவணனை நாமினேட் செய்ததும் இல்லை. அவர் குறித்து பின்னால் பேசியதும் இல்லை. இன்று சேரன் மட்டும் நிதானமாக பேசாமல் இருந்திருந்தால் பிக்பாஸ் வீட்டில் அடிதடியே நடந்திருக்கும்.

அவார்டு கொடுக்கலாம்
சேரனின், அன்பு, அடக்கம், அமைதி மற்றும் அவரது குணத்திற்கே அவார்டு கொடுக்கலாம். தன்னை எதிராளி கேவலமாக பேசும் போதும் அந்த சூழ்நிலையை அமைதியாக கையாண்ட சேரனை பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
சேரன் சார் சல்யூட்
இப்பவும் சேரன் சார் சொல்றாரு: அப்படி சொல்லாதீங்க அண்ணே...
சேரன் சார் சல்யூட் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











