சீக்ரெட் ரூமில் சேரன்.. யாரோட மாஸ்க்கெல்லாம் கிழியப்போகுதோ!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo1 :Day76: ஹவுஸ்மேட்ஸ்களை கண்டிக்கும் கமல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குநர் மிகவும் நேர்மையாக விளையாடி வருகிறார். அவரது நேர்மை மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

யாரைப்பற்றியும் புரணி பேசாமல் அருமையாக விளையாடி வருகிறார் மனிதர். இதனால் பலமுறை கமல்ஹாசனே அவரை பாராட்டியிருக்கிறார்.

வெளியே அழைத்த கமல்

வெளியே அழைத்த கமல்

இந்நிலையில் நேற்றிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து சேரன் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இதுதொடர்பாக இன்று வெளியான புரமோவிலும் சேரன் பெயர் உள்ள கார்டை காட்டி வெளியே அழைத்தார் கமல்.

சீக்ரெட் ரூமில் சேரன்

சீக்ரெட் ரூமில் சேரன்

சேரனும் நன்றி சார் எனக்கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். இந்நிலையில் சேரன் பிக்பாஸ் வீட்டில் உள்ள சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காதலுக்கு சேரன் தடை

காதலுக்கு சேரன் தடை

இதுவரை கவின் சேரனுக்கு பின்னால் தரக்குறைவாக பேசி வந்தார். லாஸ்லியாவுடனான காதலுக்கு சேரன் தடையாக இருப்பதாக நினைத்து, சேரன் குறித்து தவறாக பேசி வந்தார்.

முறைத்த கவின்

முறைத்த கவின்

மேலும் மகள் என பொய்யாக கூறி பாசமாக இருப்பது போல் நடிக்கிறார் என்றும் சேரன் செய்வது எல்லாம் டிராமா என்றும் கூறி சேரனை இழிவாக பேசினார். மேலும் சேரன் குறித்து லாஸ்லியா நல்ல விதமாக பேசிய போதும் கூட அவரை பற்றி பேசாதே என கோபமாக கூறி முறைத்தார் கவின்.

சேரனுக்கு புரிந்து விடும்

சேரனுக்கு புரிந்து விடும்

இந்நிலையில் சேரன் வெளியே போயிவிட்டார் என்று நினைத்து நிச்சயம் கவின் ஏதாவது பேசுவார். அதேபோல் லாஸ்லியா உண்மையிலேயே சேரன் மீது பாசமாகதான் இருந்தாரா என்பதும் சேரனுக்கு நன்றாக புரிந்துவிடும்.

மாஸ்க் கிழிந்துவிடும்

மாஸ்க் கிழிந்துவிடும்

சேரன் மற்றவர்களிடம் உண்மையாகவே இருந்த நிலையில், சேரனிடம் யாரெல்லாம் உண்மையாக இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் நிச்சயம் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். மற்றவர்கள் சேரனை தெளிவுபடுத்துவதைவிட சேரனே அதனை புரிந்துகொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தெரிந்துவிடும் யாரெல்லாம் மாஸ்க் போட்டு சேரனிடம் நடித்தார்கள் என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X