அவசரப்பட்டுட்டோமே.. லாஸ்லியா, தர்ஷன் பத்தி சேரன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் தர்ஷனை நாமினேஷன் செய்த சேரன் அளித்த விளக்கம் லாஸ்லியா ஆர்மியனரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியி நாமினேஷன் புராசஸ் நேற்று தொடங்கியது. இதற்கான புரமோவும் நேற்று வெளியானது.
அதில் ஹவுஸ் மேட்ஸ் யாரை எவிக்ட் செய்ய விரும்புகிறார்களோ அவர்களின் பெயரை நாமினேட் செய்தனர். அதன்படி சேரன் லாஸ்லியவையும் தர்ஷனையும் நாமினேட் செய்தார்.

திட்டி தீர்த்தனர்
இந்த புரமோ நேற்று ஒளிபரப்பானது. இதனை பார்த்து லாஸ்லியா ஆர்மியினர் செம காண்டாகினர். சேரனை கண்டமேனிக்கு திட்டி தீர்த்தனர்.

காரணம்
இந்நிலையில் நேற்றிரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் ரூமில் லாஸ்லியா மற்றும் தர்ஷனின் பெயரை நாமினேட் செய்தார். அப்போது அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

இந்த முகங்களுக்கு நடுவில்
அதாவது லாஸ்லியாவும் தர்ஷனும் அப்பழுக்கற்ற குழந்தைகளாக இந்த வீட்டில் வலம் வருகின்றனர். இந்த முகங்களுக்கு நடுவில் அவர்கள் இருக்க தேவையில்லை என கூறினார் சேரன்.

திட்டிய ஆர்மியினர்
சேரன் லாஸ்லியா மற்றும் தர்ஷன் பெயரை மட்டும் நாமினேட் செய்வதை புரமோவில் காட்டியதால் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆர்மியினர் அதிர்ச்சியடைந்தனர். இதன் காரணமாக அவர்கள் சேரனை திட்ட தொடங்கினர்.

குரூர முகங்கள்
இந்நிலையில் எபிசோடை பார்த்த பின்னர் அவர்கள் கூலாகி உள்ளனர். உண்மைதான் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு குரூர முகத்துடன்தான் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











