ப்பா.. என்னா அடி.. என்னை அடிச்ச மாதிரி இருந்தது? கவினுக்கு விழுந்த பளார் குறித்து சேரன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவினின் நண்பர் அவரை அறைந்தது, தன்னை அடித்தது போல் இருந்ததாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் குடும்பத்தினர், சீட்டுக்கம்பெனி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று அவரது நண்பர் பிரதீப் ஆன்டனி வந்தார்.
எல்லோர் முன்னிலையிலும் அமர்ந்து பேசிய அவர், புறப்படும் நேரத்தில் ஒரு கடமை பாக்கியிருக்கிறது எனக்கூறி கவினை ஓங்கி அறைந்தார். பின்னர் அவரை கட்டிப்பிடித்து புறப்படுகிறேன் என்று கூறி சென்றார்.

அதிர்ந்த போட்டியாளர்கள்
கவினை அவரது நண்பர் அறைந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போயினர்.

அமைதியான வீடு
வனிதா, சேரன், லாஸ்லியா, ஷெரின், சாண்டி ஆகியோரின் முகத்திலேயே அவர்களின் அதிர்ச்சி வெளிப்பட்டது. அவர் வெளியே சென்ற பிறகு பிக்பாஸ் வீடே சற்று நேரம் அமைதியாக இருந்தது.

நாம் பேசக்கூடாது
பின்னர் லாஸ்லியா, வனிதா, ஷெரின் ஆகியோர் இதுகுறித்து பேசினர். இப்படி ஒரு நிகழ்ச்சியில் அடிக்கிறார் என்றால், அந்தளவுக்கு கவினிடம் உரிமை எடுத்துள்ளார். அதில் நாம் தலையிட முடியாது என்றார் வனிதா.

என்னை அடிச்சது போலிருந்தது
தொடர்ந்து சேரனிடம் இதுகுறித்து பேசினார் ஷெரின். அப்போது என்னா அடி, ப்பா என்னை அடிச்சது போல் இருந்தது என்றார். அதற்கு ஷெரின் தனியாக அழைத்து சென்று அடித்திருக்கலாம் எல்லோருக்கும் முன்னிலையில் அடித்திருக்கக்கூடாது என்றார்.


Click it and Unblock the Notifications











