பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணனும்னா எப்பவும் கக்கூஸ் ஸோன்ல இருக்கனும்! புட்டு புட்டு வைத்த சேரன்!

Recommended Video

Losliya Bigg Boss Winner : ட்விட்டரில் தெறிக்கும் லொஸ்லியா Hashtag

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டுமானால் எப்படி இருக்க வேண்டும் என மரண லெவல் விளக்கம் கொடுத்துள்ளார் சேரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது போட்டியாளர்களை வச்சு செய்தனர்.

இதனைதொடர்ந்து பேசிய பிக்பாஸ், எப்படி சிறந்த பிக்பாஸ் போட்டியாளர் ஆவது என்பது குறித்து போட்டியாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவிப்பார்கள் என்றார். அதில் ஷெரின், சாண்டி உள்ளிட்டோர் பேசுவது மட்டும் காண்பிக்கப்பட்டது.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்நிலையில் அதுகுறித்து சேரன் மற்றும் வனிதா ஆகியோர் பேசிய காட்டப்படாத காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த அன்சீன் க்ளிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வச்சு செய்த சேரன்

அதில் பேசும் சேரன், கக்கூஸ் கேங்கை வச்சு செய்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, நாங்க சிறந்த போட்டியாளரா என்பது தெரியாது. ஆனால் 90 நாள் வந்திருக்கிறோம். இங்க சிறந்த போட்டியாளரா வரனும்னா ரொம்ப நேரம் கக்கூஸ்ல உட்காந்திருக்கனும். வருதோ இல்லையோ கக்கூஸ் ஸோன்ல உட்காந்திருக்கனும்.

வெண்டைக்காய் வெட்டனும்

வெண்டைக்காய் வெட்டனும்

அப்புறம் காலையில் எழுந்ததும் பாட்டுப் போடுவார்கள், உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுதோ இல்லையோ நீங்கள் ஏதாவது ஆட வேண்டும், நான் அதனை நிறைய முறை செஞ்சிருக்கேன், அதனாலதான் சொல்றேன். அதுக்கு அப்புறம் எவ்வளவு பெரிய சண்டை நடந்தாலும், உங்களுக்கு சம்பந்தம் இல்லைன்னா, வெண்டைக்காய் வெங்காயம் இப்படி ஏதாவது எடுத்து வெட்டிக்கிட்டு இருக்கனும்.

நாம் நாமாகவே இருந்தால்

நாம் நாமாகவே இருந்தால்

இதெல்லாம் பிக்பாஸ் வீட்டில் சர்வைவ் பண்றதுக்கு. ஆனால் நீங்கள் பினாலேவுக்கு வரவேண்டும் என்றால் நீங்கள் நீங்களாக இருங்கள். இவ்வாறு சேரன் கூறினார்.

ஹீரோ ஜீரோ

ஹீரோ ஜீரோ

இதனைத்தொடர்ந்து பேசிய வனிதா போட்டியில் ஜெயிப்பதா அல்லது மக்களின் மனதை ஜெயிப்பதா என்பது உள்ளது. மக்களின் மனதில் இடம்பிடிப்பது, நாம் நாமாகவே இருந்தால், ஏதாவது ஒரு தருணத்தில் நம்முடைய தனித்தன்மை வெளிப்பட்டுவிடும். ஒரு வாரம் இருந்து ஹீரோவாகவும் வெளியே போகலாம் 15 வாரங்கள் இருந்து ஜீரோவாகவும் வெளியே போகலாம் இவ்வாறு வனிதா பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X