Bigg boss 3 tamil: கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு... சேரனே இப்படி சொல்லலாமா?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, மற்ற சேனல்களின் நிகச்சி, சீரியல்களை பின்னுக்குத் தள்ளி ராஜ நடை போட்டு முன்னேறி வருகிறது. நிகழ்ச்சியை முன்னின்று நடத்துபவர் நம்ம ராஜ பார்வை நடிகராச்சே!
கன்டென்ட் கொடுக்கறேன் பேர்வழி என்று, தலைக்குத் தலை எதோ நாட்டாமை செய்யப் போகக் கடைசியில் நாட்டாமை டாஸ்க் இந்த வாரம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸுக்கு கொடுத்து இருக்காங்க.
ஒரே ராத்திரியில் அதற்கான செட்டை பிக்பாஸ் ஹவுஸுக்குள் வந்து யாருக்கும் தெரியாமல் போட்டுட்டு போயிடறாங்க. செட் போட்டவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

காஸ்ட்யூம் ஹவுஸ் மேட்ஸ்
ஹவுஸ் மேட்ஸுக்கு நாட்டாமை டாஸ்க் கொடுத்து இருக்கும் பிக் பாஸ், இரண்டு ஊர் என்று கீரிப்பட்டி, பாம்பு பட்டி என்று பிரித்து, சேரன் ஒரு ஊரின் தலைவர், மதுமிதா ஒரு ஊரின் தலைவி என்று பிரித்து, இவர்களுக்கு என்று ஊர் மக்களையும் பிரித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, உள்ளிருக்கும ஹாவுஸ் மேட்ஸுக்கு சத்தமின்றி உள்ளே வந்து, காஸ்டியூம் டிசைன் செய்துவிட்டும் போயிருக்கிறார்கள். பிக்பாஸ் ஹவுஸ் இந்த வாரம் முழுக்க கிராமத்து மக்களின் அழகிய உடைகளை பிரதிபலிப்பதாக இருக்கும்.

மீரா தர்ஷன்
மதுமிதா ஊரில் தர்ஷனின் அம்மா மீரா.இவரின் மனைவி ஷெரின். தர்ஷன் அம்மா பிள்ளை, பொண்டாட்டியையும் பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒவ்வொரு கேரக்டர் கொடுத்து அசத்தி இருக்கிறார்கள். ஷெரின் கையை சேரன் ஊரின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் சாண்டி கையைப் பிடிச்சு இழுத்துடறார். இதை பிராது கொடுக்கணும்னு பஞ்சாயத்தைக் கூட்டறாங்க.

பிரச்சனை என்ன?
பிரச்சனை என்னன்னு நாட்டாமை சேரன் தர்ஷனிடம் கேட்கறார். அப்போது அவர் நாட்டாமை பவ்யமா பேசுன்னு சொல்லி கொடுப்பதும் மீராதான். அப்போது சேரன் கேட்கறார் என்னம்மா பிராதுன்னு. இல்லை உங்க ஊர் ஆளு என் பொண்டாட்டி கையைப் பிடிச்சு இழுத்துட்டான்னு தர்ஷன் சொல்றார். யாரு உன் பொண்டாட்டின்னு கேட்கறார் சேரன் ஷெரின் எழுந்து நிற்கிறார்.

இந்த புள்ள மட்டும்
என்னாப்பா இது உங்க ஊரில் எல்லாரும் கருப்பா இருக்காங்க. இந்த புள்ள மட்டும் எப்படி இப்படி செவப்பா இருக்குன்னு கேட்கறார். ஷெரின் சொல்றாங்க மைதா மாவு மாதிரி இருக்கேன்னு சொல்லின் கையைப் பிடிச்சு இழுத்துட்டார்னு சொல்றாங்க. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அடுத்த சில நொடிகளில் மீராவுக்கு கோவம் வருது. ஏற்கனவே இவர் இப்படி பேசி இருக்கார்..அ தனால்தான் நான் கோவப்படறேன்னு பளிச்சுன்னு சொல்றார்.

என்ன உண்மை?
இதிலென்ன உண்மை என்றால், மீரா கருப்பு நிறம்... இந்த நிறத்தால் ரொம்ப அமுக்கப்பட்டு, அதையும் மீறி கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்னு மீரா சொல்லி அழுது இருக்கார். இப்படி இருக்கையில் நகைச்சுவை டாஸ்க் என்று கூறி இப்படிப் பேசுவது தவறுதானே... இதை ஏன் சேரன் உணரவில்லை? கருப்பு நிறம் இப்போது கேலிக்கு உரிய நிறம் இல்லை என்றாலும், இதை எல்லாம் இப்படி பேசக் கூடாது என்கிற இடம் பொருள் ஏவல் தெரியாதவரா சேரன்,
வெற்றிக் கொடி கட்டு படத்தில் எப்படி மாளவிகாவுக்கு கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு பாடலை படமாக்கினார்? தப்பு சேரன் சார்.. தப்பு!


Click it and Unblock the Notifications











