இது ஆண்டவனுக்கே அடுக்காது.. அபாண்டமாக பழி சுமத்திய மீரா! கண்ணீர்விட்டு கதறிய சேரன்!

Recommended Video

Bigg Boss Meera Arrest : பணமோசடி வழக்கில் மீரா கைது- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் இயக்குநர் சேரன் தவறான எண்ணத்தில் தன்னை தொட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனுக்கு ஆரம்பத்தில் இருந்தே இயக்குநர் சேரனை கண்டால் ஆகவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை அவமானப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சேரனை கண்டாலே அருவருப்பாக உள்ளது, வாந்தி வருகிறது, நீங்கள் பார்த்த அவரின் முகம் வேறு, நான் பார்த்த முகம் வேறு என்று மிக கேவலமாக சேரன் முதுகுக்குப் பின்னால் பேசினார் மீரா. இதனை சபையில் கமல்ஹாசன் கடந்த வாரம் பட்டென போட்டுடைத்தார்.

திருந்தாத மீரா

திருந்தாத மீரா

அதற்கு பிறகும் கூட திருந்தவில்லை மீரா. தொடர்ந்து சேரனை அவமானப்படுத்தி வருகிறார். தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் கூட கிடைக்கும் கேப்பில் எல்லாம் சேரனை அவமதித்து வருகிறார். நேற்று முன்தினம் நிறம் குறித்து சேரன் தவறாக பேசினார் என்றார்.

அணுகுண்டை போட்ட மீரா

அணுகுண்டை போட்ட மீரா

அதற்கு பதிலளித்த சேரனை கத்தாதீங்க, டீசன்ட்டா பேசுங்க என்று கடுப்பேத்தினார் மீரா. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் வயிற்றில் கை வைத்து தள்ளினார் என்று கூறி அணுகுண்டை போட்டார். கை வைக்க அது சரியான இடம் அல்ல, மற்ற ஆண்கள் யாரும் அங்கு வராத நிலையில் சேரன் மட்டும் ஏன் அங்கு வந்தார் என்றும் கேள்வி எழுப்பி அதிர வைத்தார் மீரா.

குழந்தைகளின் மீது சத்தியம்

குழந்தைகளின் மீது சத்தியம்

மேலும் மேன் ஹேன்ட்லிங், எனக்கு வலிச்சது என்றும் தன்பாட்டுக்கு சேரன் மீது புகார்களை அடுக்கினார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த சேரன், நான் தள்ளிவிட்டது உண்மைதான் ஆனால் எந்த தவறான எண்ணமும் இல்லை. இது எனது இரண்டு குழந்தைகளின் மீது சத்தியம் என்று கூறினார்.

சேரனுக்குதான் ஆதரவு

சேரனுக்குதான் ஆதரவு

மொத்த ஹவுஸ்மேட்ஸ்களுட் சேரனுக்குதான் சப்போர்ட் செய்தனர். எப்போதும் சேரன் மீது குறை சொல்லும் சரவணன் கூட நேற்று சேரனுக்குதான் சப்போர்ட் செய்தார். மதுமிதா, அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா ஷெரின் ஆகிய அனைவரும் சேரனுக்குதான் ஆதரவாக பேசினார்.

கண்ணீர் விட்டார்

கண்ணீர் விட்டார்

அப்போதும் அடங்கவில்லை மீரா, சேரன் குறித்து இழிவான கருத்துக்களை கூறினார். டாஸ்க்கின் போதும் கூட சேரனை நடத்தக்கெட்டவர் என்றார். இதையெல்லாம் கேட்ட சேரன் கையெடுத்து கும்பிட்டப்படி மன்னிப்பு கேட்டுவிட்டு, என்னை விட்டுவிடுங்கள் நான் இனி யாருடனும் பேசவில்லை பழகவில்லை என்று கூறி கண்ணீர் விட்டார்.

கண்ணீர்விட்ட பார்வையாளர்கள்

கண்ணீர்விட்ட பார்வையாளர்கள்

நான் இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக்கிறேன். அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும், இந்த விளையாட்டுக்கு நான் இங்கு வரவில்லை. என் பெயர் கெட்டுப்போனால் என் மகள்களின் வாழ்க்கையே கெட்டுப் போய்விடும் என கதறினார் சேரன். சேரன் கதறியதை பார்த்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் கண்ணீர்விட்டனர்.

ஆடிப்போன பார்வையாளர்கள்

ஆடிப்போன பார்வையாளர்கள்

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடம் சேரன் வந்த நாள் முதல் எப்படி நடந்து கொள்கிறார் என்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கு தெரியும். ரேஷ்மாவின் கதையை கேட்டு அவரின் தாய்மையை மதிப்பதாக கமலிடம் கூறினார். லாஸ்லியாவை தனது மகள் என்றுகூறி பெருமைபட்டார். அப்படி பட்ட மனுஷன் மீது ஆண்டவனுக்கே அடுக்காத வகையில் அபாண்டமாக பழிசுமத்தியுள்ளார் மீரா மிதுன். சேரன் மீது மீரா கூறிய அபாண்டமான பழியை கேட்டு பார்வையாளர்களும் ஆடித்தான் போயினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X