போட்டி நிகழ்ச்சிக்கு போவாரா மணிமேகலை?.. மொழியை கலக்காதீங்க.. செய்யாறு பாலு சொன்ன விஷயம்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே கோமாளியாகவும் தற்போதைய சீசனில் ஆங்கராகவும் செயல்பட்டு வந்த மணிமேகலை, இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். இந்த விஷயத்தில் நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்டுவரும் மற்றொரு ஆங்கரை அவர் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த முடிவை அவர் சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், தன்னுடைய சுயமரியாதை மிகவும் முக்கியம் என்று தெரிவித்திருந்தார். பிரியங்கா தன்னை செயல்பட விடவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விஷயம் பூதாகரமாகியுள்ளது. பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவை குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டார் பிரியங்கா.

television vijay tv cheyyaru balu

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து 5வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த ஷோ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் குக் பிரியங்கா டைட்டிலை வெற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார் நிகழ்ச்சியின் ஆங்கர் மணிமேகலை. கடந்த 2019ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், துவக்கத்திலிருந்தே கோமாளியாக நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த மணிமேகலை, இந்த சீசனில் தர்ஷனுடன் இணைந்து ஆங்கராக மாறினார்.

விலகிய மணிமேகலை: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்டுவந்த பிரியங்கா, மணிமேகலையை அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்தியதை நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்கள் அனைவரும் உணர்ந்தனர். தன்னை ஆங்கராக பிரியங்கா செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் மணிமேகலை. இதனிடையே, நிகழ்ச்சியில் பொறுத்து பொறுத்து போன மணிமேகலை ஒரு கட்டத்தில் வெடித்து விட்டார். தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவையும் எடுத்துள்ளார். இந்த விஷயத்தில் எந்தவிதமான கருத்தையோ விளக்கத்தையோ கொடுக்காமல் பிரியங்கா வெளிநாடு சென்றுவிட்டார்.

மணிமேகலைக்கு பெருகும் ஆதரவு: இந்நிலையில் மணிமேகலைக்கு இந்த விஷயத்தில் ஆதரவு பெருகி வருகிறது. பல பிரபலங்களும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலுவும் மணிமேகலை மற்றும் பிரியங்கா விஷயத்தில் வீடியோ மூலம் பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் உள்ளே ஏராளமான பாலிடிக்ஸ் நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய் டிவியின் கம்பெனி ஆர்ட்டிஸ்டாக பிரியங்கா தொடர்ந்து செயல்பட்டு வந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் ஆங்கராக பல இடங்களில் தன்னை வெளிப்படுத்தியிருந்தார்.

television vijay tv cheyyaru balu

செய்யாறு பாலு கருத்து: இதன்மூலம் அவர் பாதுகாப்பின்மையை உணர்ந்தது வெளிப்பட்டுள்ளதாகவும் அல்லது சேனலின் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்த முயன்றதாகவும் மணிமேகலை முன்னுக்கு வந்துவிடுவாரோ என்று பிரியங்கா நினைத்திருக்கலாம் என்றும் செய்யாறு பாலு தொடர்ந்து பேசியுள்ளார். இந்த விஷயத்தில் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது குறித்து பேசியுள்ள செய்யாறு பாலு, அது போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரியங்காவிற்கு விஜய் டிவி அதிகமாக சப்போர்ட் செய்வதாகவும் அவரிடம் மணிமேகலையை மன்னிப்பு கேட்க வைத்ததுதான் இந்த பிரச்சினைக்கு மிகப்பெரிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

போட்டி நிகழ்ச்சிக்கு போவாரா மணிமேகலை?: இதனிடையே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை அடுத்ததாக டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்புகள் அதிகம் என்றும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் பிரியங்காவின் செல்வாக்கு கண்டிப்பாக குறையாது என்றும் கூறியுள்ளார். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், இது உண்மையானால் மணிமேகலைக்கு ரசிகர்களின் சப்போர்ட் மேலும் அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா கன்னட பெண், மணிமேகலை தமிழ்பெண் என்ற மொழி விஷயத்தை இதில் சேர்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: vijay tv cheyyaru balu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X