Azhagu Serial: யார் குழந்தையை யாருக்குடா நரபலி கொடுக்கறது?

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் நாம எதை எல்லாம் செய்ய கூடாதோ அதைத்தான் கதையா சொல்லி காமிக்கறாங்க.

மலைப் பிரதேசத்துக்கு போறது, மலை மேலே ஏறுவது எல்லாம் பலருக்கும் பிடிக்கும்.அதோடு, இதை ஒரு திரில், கிக்குன்னு கூட போயிட்டு வந்து பேசிக்குவாங்க.

எதை செய்தாலும் உயிர் பாதுகாப்பா என்பதை மட்டும்தான் நாம் யோசிக்க வேண்டும்.அப்படி போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உயிருக்கு பாதுகாப்பாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துகிட்டு போகணும்.

குல சாமியா?

குல சாமியா?

யாருக்கு அனாதரவான காட்டில் இருக்கும் மலையில் குல சாமி கோயில் இருக்குமோ தெரியலை. போலீஸ் ஃபாரஸ்ட் கண்ட்ரோலில் உள்ள ஏரியா சார் இதுன்னு சொல்றாங்க. அங்க கோயில் இருக்குதாம் அங்கே போறாங்களாம் குடும்பத்தோட வேனில். அதுவும் மலை மேல பயங்கர ஜாலியா ரிப்பேரான வேனில் போறாங்க.

வண்டி பிரேக்

வண்டி பிரேக்

வண்டி பிரேக் பிடிக்காம மலையிலிருந்து தலைகுப்புற அவிழ்த்து. குடும்பமே திக்காலுக்கு ஒண்ணா சிதறிப் போகுது .ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில் மாட்டிக்கறாங்க. ஆனா, உயிரோட இருக்காங்க அதுதான் ஆச்சரியம். இதைவிட இன்னொறு ஆச்சரியம், சுதா ஒரு பாறையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கறா.காப்பாத்து பூர்ணான்னு கேட்டும் பூர்ணா கண்டுக்கலை.. எப்படிப்பட்ட நிலைமையில் எல்லாரும் இருக்காங்க... இந்த நிலையில் கூடவா ஒரு பெண்ணின் மனசு கல்லாக இருக்கும்? இது மனிதாபிமானம் அற்ற காட்சி. இங்கே கத்திரிக் கோல் வச்சு இருக்கணும்.

பூர்ணா மகேஷ்

பூர்ணா மகேஷ்

மகேஷ் பூர்ணாவை கண்டு பிடிக்கிறான். பூர்ணா பசிக்குதுன்னு சொல்றது, மகேஷ் முட்டை சுட்டு தர்றதுன்னு இதெல்லாம் கூட ஓகேதான். கர்ப்பிணிப் பொண்ணு பசிக்கத்தான் செய்யும். அப்போது கூட யாரையாவது பார்த்தியான்னு மகேஷ் கேட்க, பூர்ணா கடைசி வரைக்கும் சுதாவைப் பார்த்ததை மகேஷிடம் சொல்லவே இல்லை. திரும்பவும் பூர்ணாவை கெட்டவளாக்கி காட்டணும்னா கதையை இப்படித்தான் பண்ண வேண்டும் என்கிற அவசியம் இல்லையே.

கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பது பழமொழி

இந்த மாதிரி

இந்த மாதிரி

இந்த மாதிரி மலைக்கு எல்லாம் போயி மாட்டிக்கிட்டா, இப்படித்தான் லூசு மாதிரி பசங்க பூசாரி,, சாமியார்னு வேஷம் போட்டுக்கிட்டு, எந்த இலையையாவது தின்னுட்டு, போதையில நரபலி குடுத்துட்டு பெரிய ஆளா வரணும்னு சைக்கோ மாதிரித்தான் திரிவானுங்க... யாரு குழந்தையை யாருடா நரபலி கொடுக்கறது? தயவு செய்து குழந்தைகள் பார்க்கும் நேரத்தில்பெரியவர்கள் இந்த மாதிரி சீரியல்களை பார்க்காதீர்கள்.

நரபலி குடுக்கறதுன்னா என்னம்மா...காளி அம்மன் இப்படி எல்லாம் உயிரை கேட்குமான்னு பயந்து போயி கேள்வி கேட்பாங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X